»   »  எனக்குக் காதலைப் புரிய வைத்ததே மணிரத்தினம்தான்.. மனம் திறக்கும் ரம்யா!

எனக்குக் காதலைப் புரிய வைத்ததே மணிரத்தினம்தான்.. மனம் திறக்கும் ரம்யா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

தொலைக்காட்சிகளில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற தொகுப்பாளினிகளின் பங்கு முக்கியமானது. அசத்தலான பேச்சு... அழகாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் லாவகம் என தொகுப்பாளினிகளுக்காகவே ரசிகர்கள் டிவி ரிமோட்டை கையில் எடுக்காமல் ரசிப்பார்கள்.

விஜய்டிவியின் அழகு அசத்தல் தொகுப்பாளினியான ரம்யாவிற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அலட்டல் இல்லாத பேச்சு... நிகழ்ச்சியை உற்சாகமாக கொண்டு செல்லும் திறமை என தனக்கென தனி பாணியை கொண்டுள்ள ரம்யாவின் சினிமா என்ட்ரீ மணிரத்னம் மூலமாக அமைந்துள்ளது.

ஓ காதல் கண்மணியில் ரம்யாவின் நடிப்புக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வரும் நிலையில், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தனுசின் ‘டங்காமாரி' குத்துப்பாடலுக்கு நளினமாக நடனமாடி, அசத்தலான பெர்பாமென்ஸ் என அப்ளாஸ் அள்ளியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பு நடிப்பு, நடனம் என எதிலும் ஆர்வம் காட்டாமல் நிகழ்ச்சி தொகுப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரம்யா, தற்போது நடிப்பிலும், நடனத்திலும் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறார்.

கோடை காலத்தில் ரம்யாவுக்கு ஜில் பாராட்டை தெரிவிக்கவேண்டுமே என்று ஒரு மத்தியான வெய்யில் நேரத்தில் செல்பேசியில் பிடித்தோம். வாழ்த்துக்களை தெரிவித்த கையோடு, அவருடைய புத்தம் புதிய சினிமா பயணம் பற்றியும், சின்னத்திரை பயணம் பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டோம். நீங்களும் படியுங்களேன்....

கனவு, ஆசை லட்சியம்

வைஷ்ணவா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே. கல்லூரி காலத்தில் இரண்டு குறும்படங்களை இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு.

தொகுப்பாளினியானது எப்படி?

விஜய் டிவியில் இன்டன்ஷிப் போன போது காம்பியரிங் வாய்ப்பு கிடைத்தது. காம்பியரிங் மூலமாக நிறைய சினிமா உலகில் பலரது நட்பு கிடைத்தது. காம்பியரிங்கில் சிக்கிக்கொண்டதால் என்னால் அங்கு எளிதாகப் போக முடியவில்லை.

துரத்திய சினிமா வாய்ப்புகள்

சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதில் எனக்கு அப்போது ஆர்வம் சுத்தமாக இல்லை. எனவே அதை நாசூக்காக தவிர்த்துவிட்டேன்.

மணிரத்னம் பட அழைப்பு

இப்போது நடிக்க காரணம், மணிரத்னம் படம் என்பதால் நான் ஒத்துக்கொண்டேன். நானாக வாய்ப்பு தேடி போகவில்லை. தானாக வந்த வாய்ப்பை விட மனமில்லை. மணிரத்னம் மாதிரியான இயக்குநரிடம் இருந்த வந்த அழைப்பை மறுக்க முடியுமா?

காதலை உணர்த்திய படம்

நான் விபரம் தெரிந்து பார்த்த முதல் தமிழ் படம் தளபதி... லவ் என்றால் நான் புரிந்து கொண்ட படம் அலைபாயுதே... இரண்டுமே மணிரத்னம் படம். நான் இயக்குநர் மணிரத்னத்தின் மிகப்பெரிய ரசிகை.

எப்படி இருக்கிறது சினிமா பயணம்?

இந்தபடம் எனக்கு முதல் படம். ரொம்ப ஜாலியாக செய்தேன். சினிமா பயணம் நல்லா இருக்கிறது. இந்த எக்ஸ்பீரியன்ஸ் பிடித்தது. கேரக்டருக்கு ஏற்றமாதிரி நடிக்கணும். சினிமாவில் நடிப்பது சவாலான விசயம்.

வில்லியாக நடிக்கமாட்டேன்

தொடர்ந்து நடிக்க ஆசை. ஏனோதானே என்று செய்ய மாட்டேன். வில்லியாக நடிக்க மாட்டேன் என் டேஸ்ட்க்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன்

ஷங்கர்,பாலா படங்களில் வாய்ப்பு?

மிகப்பெரிய இயக்குநர்களான ஷங்கர், பாலா ஆகியோரிடம் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

நடனத்தின் மீதான ஆர்வம் எப்படி?

சின்ன வயதில் நடனத்தின் மீது ஆர்வம் உண்டு. 12 வருஷம் டான்ஸ் கற்றுக்கொண்டேன். இதுவே உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சிகளை எளிதாக தொகுத்து வழங்க முடிந்தது.

மேடையில் நடனமாட ஆசை

படிப்பின் மீதான ஆர்வத்தில் நடனத்தை தள்ளிவைத்தேன். கல்லூரியில் படித்து முடித்து மாடலிங், ஆங்கரிங்,செய்ய போனேன். நான் முன்பு கற்றுக்கொண்ட நடனமே இப்போது ஜோடி நம்பர் 1ல் எனக்கு கை கொடுத்தது. டங்காமாரி பாடலுக்கு நடனமாடியது நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. விஜய் அவார்ட்ஸ் போன்ற விருது விழா மேடைகளில் நடனமாடவேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

தனுஷ் ரொம்ப பிடிக்கும்

பேச்சினூடே பிடித்த நடிகர், நடிகையார் என்ற கேள்வி எழுந்தது. ரம்யாவிற்கு பிடித்த நடிகர் தனுஷ். நடிகை அன்றும் இன்றும் என்றும் ஜோதிகா என்கிறார். நான் தனுஷ் ஃபேன். அவர் நேச்சுரலா நடிக்கிறார். அந்த கேரக்டராகவே மாறிவிடுகிறார். தனுஷின் எளிமை பிடிக்கும் என்கிறார் ரம்யா.

ஜோதிகா – நித்யா மேனன்

நடிகைகளில் ஜோதிகா பிடிக்கும் அவரின் மிகப்பெரிய ரசிகை நான். ரொம்ப வருஷம் கழித்து 36 வயதினிலே படத்தில நடிக்க வர்றாங்க பெரிய எக்சைட்மென்ட். இப்போ நித்யா மேனன் பிடிக்கும்.

தமன்னா - சமந்தா

தமன்னா டான்ஸ்... சமந்தா நடிப்பு... அமலா பால் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற லுக் என தனித்தனியா பிடிக்கும்.

சீரியல் வாய்ப்பு வந்தால்?

நான் சீரியல் பார்க்கிறதே இல்லை. எனவே சீரியலில் நடிப்பது பற்றி ஐடியா எதுவும் இல்லை.

புதுசு புதுசா சாப்பிடுவேன்

என்னுடைய உடல் நலத்தின் மீது தனி அக்கறை எடுத்துக்கொள்வேன். தினசரி 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். ஹெல்தியா சாப்பிடுவேன். புதிய ஹோட்டல்கள் திறந்தால் முதலில் போய் உணவை ருசிப்பது நானாகத்தான் இருப்பேன்.

சினிமா ரொம்ப பிடிக்கும்

நல்ல திரைப்படங்களைப் பார்ப்பேன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களையும் பார்ப்பேன். வீட்டில் நன்றாக சமைப்பேன்.

எதையும் நான் திட்டமிடுவதில்லை

தொலைக்காட்சியில் பார்க்கிற ரம்யாவிற்கும், வீட்டில் இருக்கும் ரம்யாவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நண்பர்கள் ரொம்ப குறைவு நான் எதையும் திட்டமிட்டதே இல்லை. நான் எதிர்பார்க்கவில்லை. இயக்குநர் ஆக நினைத்தேன், தொகுப்பாளினி ஆனேன். இப்போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது.

பாஸிட்டிவ் எண்ணங்கள்

கரெக்டான நேரத்தில் கரெக்டான ஆளை சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன் எதையும் பாஸிட்டிவ் ஆக எடுத்துக்கொள்வேன். அடுத்த நிமிஷத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை என்கிறார் ரம்யா. இதுதான் ரம்யாவின் வெற்றியின் ரகசியம்... அழகின் ரகசியமும் கூட.

English summary
TV compere and now a movie actress, Ramya has all the facets with her and has opined her secret to the success.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos