» 

சோகத்தில் சந்தியா

 

புன்னகைப் பூவாக திரிந்து கொண்டிருந்த சந்தியா இப்போது பெரும் சோகத்தில் உள்ளார். எல்லாம் செல்வராகவன் படத்தில் இருக்கிறேனா, இல்லையா என்ற குழப்பம்தான் காரணம்.

காதல் சந்தியாவுக்கு, வல்லவனுக்குப் பிறகு கொஞ்சம் போல ஏறுமுகம் காணப்பட்டது. மளமளவென சில புதிய படங்களில் புக் ஆனார், மார்க்கெட்டும் பிக்கப் ஆனது.

பிருத்விராஜுடன் கண்ணாமூச்சி ஏனடா, ஷாமுடன் தூண்டில், பிரசன்னாவுடன் மஞ்சள் வெயில் என சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதேபோல, செல்வராகவன் இயக்கத்தில் இது மாலை நேரத்து மயக்கம் என்ற படத்திலும் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்க புக் ஆனார் சந்தியா. இந்தப் படத்தை ரொம்பவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் என்ற புதிய படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கார்த்தியும், ரீமாவும் நடிக்கவுள்ளனராம்.

அப்படியால் இது மாலை நேரத்து மயக்கம் என்னாச்சு என்று கேட்டால் சந்தியாவிடம் பதில் இல்லை. உண்மையில் அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இயக்குநரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார் குழப்பமாக.

சரி, சோகத்தைத் துடைப்போம் என்று இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்துக் கேட்டோம். அதற்கு சந்தியா, மரத்தை சுற்றிச் சுற்றி வந்து பாடுவதும், ஹீரோவைக் காதலிப்பதை மட்டுமே வேலையாகவும் கொண்டுள்ள வழக்கமான ஹீரோயின் வேடம் எனக்குப் பிடிக்கவில்லை.

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்போதுதான் எனது முத்திரையை சினிமாவில் பதிக்க முடியும் என்கிறார் சந்தியா.

நல்ல விஷயம், நிறைவேறட்டும்.

Topics: actress, இயக்குனர், கண்ணாமூச்சு ஏனடா, காதல், செல்வராகவன், தூண்டில், நடிகை சந்தியா, மஞ்சள் வெயில், மாலை நேரத்து மயக்கம், வல்லவன், director, kannamoochi enada, kathal, manjal veyil, movie, sandhya, selvaraghavan, thoondil, upset, vallavan

Tamil Photos

Go to : More Photos