twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூ விழி வாசலிலே விஜய்க்கு... மக்கள் என் பக்கம் அஜீத்துக்கு.. வேதம் புதிது எனக்கு: சத்யராஜ்

    |

    சென்னை: தனது முந்தைய வெற்றிப்படங்களின் ரீமேக்கில் தற்போதுள்ள கதாநாயகர்கள் யார் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆனந்த விகடனின் விகடன் மேடையில் மனம் திறந்து கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.

    அதில், 'நீங்கள் நடித்த படங்களை ரீமேக் பண்ணச் சொன்னால், எந்தப் படத்தைப் பண்ணலாம்... அதில், இப்போ யார் நடிக்கலாம் என ஒரு வாசகர் கேட்டுள்ள கேள்விக்கு சத்யராஜ் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

    பூவிழி வாசலிலே...

    பூவிழி வாசலிலே...

    பூவிழி வாசலிலே படம் நம்ம விஜய்க்கு செமயா செட்டாகும். குழந்தைத்தனமான முகம் உள்ள விஜய், இன்னொரு குழந்தையுடன் நடிக்கிறது பெரிய பிளஸ்.

    மக்கள் என் பக்கம்...

    மக்கள் என் பக்கம்...

    மக்கள் என் பக்கம்'ல அஜீத் நடிச்சா நல்லா இருக்கும், அவரோட இமேஜூக்கு அடிச்சுத் தூக்கும் இந்தப்படம்.

    கடலோரக் கவிதைகள்....

    கடலோரக் கவிதைகள்....

    ‘டமுக்கு டம்மா டம், ஜமுக்கு ஜம்மா ஜம்'னு கடலோரக் கவிதைகள் கார்த்திக்கு கரெக்டான சாய்ஸ்.

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு...

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு...

    ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபிஸரா ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு' நம்ம சூர்யாவுக்கு பிரமாதமா இருக்கும்.

    அண்ணா நகர் முதல் தெரு...

    அண்ணா நகர் முதல் தெரு...

    அண்ணா நகர் முதல் தெரு'வில் சிவகார்த்தியன் பின்னி எடுக்கலாம்.

    வேதம் புதிது எனக்குத் தான்...

    வேதம் புதிது எனக்குத் தான்...

    ஆனா, வேதம் புதிது மட்டும் திரும்ப எடுத்தா, சத்யராஜே நடிச்சாத்தான் நல்லா இருக்கும். ஏன்னா, ‘வேதம் புதிது' படத்தில் பாலுத்தேவரா நடிச்சப்போ எனக்கு வயசு 32. கதைபப்டி அந்தப் பாலுத்தேவருக்கு வயசு 60. இப்போ என் வயசு 59. அதனால, அந்தக் கேரக்டர்ல இப்போ நானே நடிச்சா கரெக்டா மேட்ச் ஆகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The famous tamil actor Sathiyaraj has given choices of heros who can act in the movies that can be remaked.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X