96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.
கதை :
பயணப் புகைப்படக் கலைஞர் கே.ராமசந்திரன் (விஜய் சேதுபதி), தனது சொந்த ஊருனான தஞ்சாவூருக்கு யதர்ச்சையாக வருகிறார். தான் படித்த பள்ளியை பார்த்த தருணத்தில் இருந்து, அவருடைய பால்ய கால காதல் நினைக்கு வருகிறது. உடனே தன்னுடன் பள்ளியில் படித்த அனைவரையும் பார்க்க...
Read: Complete 96 கதை
-
tamil.filmibeat.comபள்ளியில் படிக்கும் போது காதலித்து பிரிந்த இருவர், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது நடக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வே 96 திரைப்படம்.
வாழ்வின் பொக்கிஷமான அந்த பள்ளி நாட்களின் நினைவுகளை நம் மனதில் மீண்டும் கொண்டு வரும் விதத்தில் வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர் பிரேம். சண்டை காட்சிகள் இல்லை, அதீத ரொமான்ஸ் காட்சிகள் இல்லை, வில்லன் இல்லை... வாய்ச் சண்டைக் கூட இல்லை, படம் மெதுவாக தான் நகர்கிறது. ஆனாலும் இருக்கையைவிட்டு எழும் மனம் வரவில்லை.
விஜய் சேதுபதி... இவர் என்ன செய்தாலும் ரசிக்க முடிகிறதே... எப்படி என்பது தான் தெரியவில்லை. ஒரு காட்சியில் விஜய் சேதுபதியை பார்த்து திரிஷா 'நீ ஒரு சரியான நாட்டுக்கட்டைடா" என்பார். அதற்கு விஜய் சேதுபதி கொடுக்கும் வெட்கம் கலந்த சிரிப்பு ரியாக்ஷன் இருக்கே.... ச்சே வேறு யாராவது இதை செய்திருந்தால் இப்படி ரசித்திருப்போமா ..
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
விமர்சனங்களை தெரிவியுங்கள்