twitter
    Tamil»Movies»Aagam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • படித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போகாமல் இந்தியாவிலேயே வேலைப் பார்க்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட கல்லூரி மாணவன் இர்ஃபான். இதற்காக தனி இயக்கத்தையே நடத்துகிறார்.

      வல்லரசு இந்தியா என்பதை விளக்க கிராபிக்ஸ் என்ற பெயரில் ஏக அமெச்சூர்த்தனங்கள்.

      தேசப்பற்று மிக்க இளைஞராக நடிக்க முயன்றுள்ளார் இர்ஃபான். நாயகி தீக்ஷிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. வந்து போகிறார்.

      ஹாலிவுட் பாணியில் கதை சொல்ல வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அதை சராசரி கோலிவுட் படத்தை விட குறைந்த தரத்தில்தான் தந்திருக்கிறார். காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அல்லாடுகின்றன.

      முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சினிமா எடுத்து விளக்க வேண்டும் இயக்குநர்.

      விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் ஒன்றும் எடுபடவில்லை. பின்னணி இசையும் சுமார்தான்.