twitter
    Tamil»Movies»Ai»Story

    ஐ கதை

    "" தமிழின் மிக பிரமாண்டமான திரைப்படம். காதல், ஆக்ஸன், திரில்லர் மற்றும் நகைச்சுவை போன்ற உணர்ச்சிகளை இணைத்து ஒரு திரைப்படமாக இயக்கியுள்ளார், இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் கதாநாயகன் "சியான் விக்ரம்",  கதாநாயகியாக எமி ஜாக்ஸன் மற்றும் சுரேஷ் கோபி, உப்பெண் படேல், சந்தானம், ராம்குமார் கனேசன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    ஐ திரைப்படம்  சென்னை, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல்,பொள்ளாச்சி, பெங்களூர் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது.

    கதை: 

    ஒரு வலிமை வாய்ந்த உடல் பெற்றவர், உண்மையான காதல், வலி  என அனைத்தும் ஒருசேர அமைத்துள்ள திரைப்படம். முதலில் லிங்கேஸ்வரன் (விக்ரம்) தமிழ் நாட்டின் சிறந்த  ஆண்மகனாக தேர்வாக  வேண்டும் என்ற குறிக்கோளுடன் உடற்பயிற்சி கூடத்தில் சேருகிறார். அங்கு இவருக்கு பயிற்றுநராக சந்தானம் வருகிறார். பிறகு லிங்கேஸ்வரன் தமிழ் நாட்டின் சிறந்த ஆண்மகனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

    அவ்விடத்தில் முதல் வில்லனாக ரவி அறிமுகமாகிறார். லிங்கேஸ் விளம்பர நடிகை மற்றும் வடிவழகி தியா (எமி ஜாக்சன்) மீது காதல் வாய்ப்படுகிறார். இதனால் தியா தன்னுடைய உடன் பணியாளர் ஜான் என்பவரை நிரகாரிக்கிறார். இவ்விடத்தில் கதையின் இரண்டாம் வில்லன் உருவாகிறார். 

    லிங்கேஸ் மற்றும் தியா இருவரும் காதலிக்கின்றனர். தியா லிங்கேஸ் யை தன்னுடைய விளம்பரத்திற்காக சீனா அழைத்து செல்கிறார். அங்கு இருவரின் காதலை எதிர்க்கும் மூன்றாவது வில்லனாக ஒசாமா ஜாஸ்மின்  வருகிறார். அதனை தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது வில்லனாக லின்கேஸ்வரனுக்கு எதிராக H4N 1 என்ற வைரசை அவரின் உடம்பில் செலுத்துகிறார். அந்த வைரசின் பெயர் "ஐ" என குறிப்பிடுகின்றனர். 

    அதனால் லின்கேசின் உருவம் மாற தொடங்கியது. இதனால் தியா தன குடும்ப மருத்துவரான வாசுதேவன் (சுரேஷ் கோபி) யிடம் உதவி கேட்கிறார். ஆனால் அம்முயற்சி தோல்வியடைகிறது. வாசுதேவன் தியாவை மணமுடிக்க எண்ணுகிறார். இதனால் கதையின் ஐந்தாவது வில்லன் உருவாகிறார். 

    இறுதியில் தியா வாசுதேவனை மனமுடிக்கின்றரா? இல்லையா? லின்கேஸ்வரனுக்கு என்ன ஆயிற்று? கதையின் முடிவு என்ன? என்பைதை வெள்ளித்திரையில் கண்டு திரைப்படத்தின் முழு கதையையும் தெரிந்து கொள்க.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஐ with us? Please send it to us ([email protected]).