twitter

    பலூன் கதை

    பலூன் அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், ஜெய் மற்றும் அஞ்சலி மீண்டும் இணையும் காதல் மற்றும் திரில்லர்  திரைப்படம். இத்திரைப்படத்தின் கதை 1980-ல் தொடங்கி தற்போது உள்ள காலகட்டம் வரை மூன்று காலகட்டங்களில் கதை நகர்கின்றது. 

    கதை :

    ஜெய், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக வாய்ப்புத் தேடி அலைகிற இளைஞன். சினிமாவில் சாதிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். சில சிக்கல்களால் அவரது ஸ்கிரிப்ட் தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டு, பேய்ப்படம் ஒன்றிற்கு ஸ்கிரிப்ட் தயார் செய்யச் சொல்கிறார் தயாரிப்பாளர். பேய்க் கதைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என வெளியேறும் ஜெய் குடும்ப சூழ்நிலை கருதி படத்தை எடுக்க ஒப்புக்கொள்கிறார். அதற்காக ஸ்கிரிப்ட் தயார் செய்ய ஊட்டியில் பேய் இருப்பதாக நம்பப்படும் வீட்டின் அருகில் இருக்கும் ரெசார்ட்டுக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணச் செல்கிறார். கூடவே அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, யோகிபாபு மற்றும் கார்த்திக் யோகி ஆகியோரையும் அழைத்துச் செல்கிறார்.

    ரிசார்ட்டில் டிஷ்கஷனில் இருக்கும் அவர்கள் கதை உருவாக்குவதைத் தவிர எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஒருசில நாட்களிலேயே அந்த வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கத் தொடங்குகின்றன. பப்புவுடன் நேசம் பாராட்டி அஞ்சலியை மட்டும் தொடர்ச்சியாக பயமுறுத்துகிறது பேய். முதலில் நம்பமறுக்கும் ஜெய் பிறகு ஏதோவொன்று இருப்பதை உணர்ந்து கொள்கிறார். அதற்குள், ஜெய்யின் அண்ணன் மகன் பப்பு உடலுக்குள் புகுந்து கொள்கிறது பேய். தான் தன்னைக் கொன்றவர்களை பலிவாங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. அந்தக் குழந்தை சொல்லும் 'செண்பகவள்ளி கேரக்டரை தேடிப் போக அந்த ஆவி அஞ்சலி உடம்புக்குள் இறங்கி விடுகிறது.

    செண்பகவள்ளி யாரால் கொல்லப்பட்டாள், ஏன் கொல்லப்பட்டாள், தன்னைக் கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறாள், இந்தக் கதைக்கும் பலூனுக்கும் என்ன தொடர்பு, என்பதெல்லாம் பிற்பாதிக் கதை. கதை எழுதப்போன இடத்தில் நடைபெறும் இந்த அமானுஷ்யங்களை மீறி ஜெய் பேய்க் கதை எழுதினாரா அதைப் படமாக எடுத்தாரா என்பது கிளைமாக்ஸ்.

    **Note:Hey! Would you like to share the story of the movie பலூன் with us? Please send it to us ([email protected]).