twitter
    Tamil»Movies»Baskar Oru Rascal»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முரட்டு ராஸ்கல் பாஸ்கராக அர்விந்த்சாமி. பளபள சட்டை, காட்டன் வேட்டி, முறுக்கு மீசை, தங்க சங்கிலி என கேரக்டருக்கு ஏத்த கெட்டப். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் அர்விந்தசாமி, மகனை பாசத்துடன் அரவணைப்பது, சூரி, ரோபோ சங்கருடன் சேர்ந்து காமெடி செய்வது, அமலா பால் மீது காதல் கொண்டு அப்பாவியாக நிற்பது, எதிரிகளை துவம்சம் செய்வது என ஒரு பக்கா கமர்சியல் ஹீரோவாக மீண்டும் வந்திருக்கிறார்.

      ஏழு வயது பெண் குழந்தைக்கு தாயாக அமலா பால். அதற்காக ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. நைனிகாவின் மாடர்ன் அம்மாவாக, விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் படம் முழுக்க வலம் வருகிறார். தன்னை புரிந்துகொள்ள மறுக்கும் மகளை நினைத்து வேதனைப்படுவது, காதல் கணவனை இழந்து தவிப்பது, அர்விந்த்சாமியின் காதலை முதலில் நிராகரிப்பது என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கமான காட்சிகள் என்றாலும், தன் சிறப்பான நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார் அமலா பால்.

      படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் குழந்தைகள் நைனிகாவும், ராகவும். எல்லா சினிமாக்களையும் போல குழந்தை நட்சத்திரங்கள் செய்யும் பெரியமனித வேலைகளை இவர்களும் பார்க்கிறார்கள். தனது அம்மாவை நண்பனின் அப்பாவுடன் சேர்த்து வைப்பதற்காக போராடும் க்யூட் நைனிகா அப்லாஸ் அள்ளுகிறார். தந்தைக்கு மேனர்ஸ் என்றால் என்றால் என்ன என்பது பற்றி பாடம் எடுப்பது, அம்மா பாசத்துக்காக ஏங்கி நிற்பது என மாஸ்டர் ராகவும் கைத்தட்டல் வாங்குகிறார்.

      சும்மா இருக்கும் போது, கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்ய நினைத்தால் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்துக்கு போய் வரலாம்.