Tamil » Movies » Chandi Veeran » Critics Review

சண்டி வீரன்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

07 Aug 2015
விமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து

tamil.filmibeat.com

தண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை விறுவிறுப்பான கதையாக சொல்லும் படம் சண்டி வீரன்.

காவிரி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சையின் மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள நெடுங்காடு மற்றும் வயல்பாடி கிராமங்களுக்கிடையே தண்ணீர்ப் பிரச்சினை. நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் குளமிருக்கிறது. உப்புத் தண்ணீர் குடித்து குடித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு செத்து விழும் வயல்பாடி மக்களுக்கு, அந்தக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீர் தர மறுக்கிறார்கள் நெடுங்காடு மக்கள்.

ஆனால் சில காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். ஏற்கெனவே பகை கொண்ட இரண்டு ஊர் பற்றிக் கொண்டு எரியப் போகும் தகவலைச் சொன்னால் போலீஸார் இப்படியா நடந்து கொள்வார்கள். இது சினிமாத்தனமாக உள்ளது.

Buy Movie Tickets