twitter
    Tamil»Movies»Dora»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பேய்ப் பட சீஸன் ஏகத்துக்கும் டல்லடித்துப் போய், பேய்கள் சினிமாக்காரர்களைக் கண்டு பயப்படும் நேரத்தில் வெளியாகியிருக்கும் படம் டோரா.

      இனி டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல், லேடி சூப்பர் ஸ்டாராகத் தொடர வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது நயன்தாராவுக்கு. இந்தப் படத்தில் ஃபைட், பஞ்ச் வசனம் என தனக்கு அந்நியமான ஏரியாக்களை புகுந்திருக்கிறார்.

      போரடிக்கும் டோராவின் முதல் பாதியில் பெரிய ஆறுதல் தம்பி ராமய்யாவின் காமெடி.

      ஹரீஷ் உத்தமனுக்கும் நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

      நிறைய இடங்களில் காலகாலமாகப் பார்த்துப் பழகிய காட்சிகள், வசனங்கள். குறிப்பாக அந்த போலீஸ் அதிகாரி, ஹரீஷைப் பார்த்து அடிக்கடி 'என்ன பண்ற... இன்னுமா கண்டுபிடிக்கல...' எனக் கேட்கும் காட்சி. நயன்தாராவின் அந்த இரட்டை முகக் காட்சியும் புதிதல்ல... சந்திரமுகி, அந்நியனில் பார்த்துப் பழகியதுதான்.

      தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் சிறப்பு. விவேக் மெர்வின் பின்னணி இசை சுமார்தான். ஒரே ஒரு பாடல். பரவாயில்லை ரகம். ஆரம்பக் காட்சிகளில் சப்தத்தைக் குறைத்திருக்கலாம்!

      ஆங்... டோரா யாருன்னு தெரியணுமா... அதான் பேயா வர்ற அந்த நாயோட பேரு!

      டோரா ஒரு நயன்தாரா படம். அவருக்காக ஒரு முறை பார்க்கலாம்!