twitter

    எந்திரன் கதை

    எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். 2010, அக்டோபர் 1 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. துபாய், சிட்னி உட்பட சில உலக நகரங்களில் செப்டம்பர் 30 இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இப்படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ்த் திரைபடங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

    கதை

    ஒரு சுயசிந்தனை எந்திரனை உருவாக்குவதே விஞ்ஞானி வசீகரனின் குறிக்கோள். பல வருட உழைப்புக்கு பிறகு சிட்டியை உருவாக்குகிறார் வசி(வசீகரன்). சகமனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் முடக்கப்படும் நிலையில் உள்ள சிட்டிக்கு உணர்வுகளையும் உருவாக்குகிறார் வசி.

    விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ (AndroHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு டேனியும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில், ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்து விடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். 

    ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி தவறான மென்பொருளை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் ரஜினி போன்ற சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள் என்பதுதான் மீதிக் கதையே.
    **Note:Hey! Would you like to share the story of the movie எந்திரன் with us? Please send it to us ([email protected]).