twitter
    Tamil»Movies»Gethu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஓகே ஓகேவுக்குப் பிறகு தொடர்ந்து சவலையான திரைக்கதைகளில் நடித்து சோர்ந்த உதயநிதி, கெத்தான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

      கதை இரண்டு கோடுகளாகப் பயணிக்கிறது. இந்தியாவின் முதன்மை விஞ்ஞானியைக் கொல்ல முயற்சிக்கும் கூலி கொலைகாரன் விக்ராந்த் ஒரு ட்ராக்.

      இந்த இரண்டு கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அந்தப் புள்ளியில் கூலிக் கொலைகாரன் சிக்குகிறானா? சத்யராஜ் தப்பிக்கிறாரா? என்பது இறுதிக் காட்சி.

      இப்படி ஒரு கதையை முடிவு செய்த பிறகு, திரைக்கதையை எத்தனை பரபரப்பாக அமைத்திருக்க வேண்டும்?

      அங்குதான் ஸ்லிப்பாகியிருக்கிறார் புதியவர் திருக்குமரன்.

      ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு உரிய எல்லாமே கெத்தில் இருக்கின்றன... ஆனால் இருக்க வேண்டிய இடத்தில், அளவில் அவை இல்லை என்பதுதான் குறை!