twitter
    Tamil»Movies»Pasanga 2
    பசங்க 2

    பசங்க 2

    U | Drama
    Release Date : 24 Dec 2015
    3.5/5
    Critics Rating
    3.5/5
    Audience Review
    ஹைக்கூ குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யா, அமலா பால், கார்த்திக் குமார், பிந்து மாதவி மற்றும் இவர்களுடன் பல குழந்தைகளும் நடித்துள்ளனர்.

    கதை 
    கவின் (நிஷேஷ்) மற்றும் நைனா (வைஷ்ணவி) ஆகிய இரு குழந்தைகளும் பள்ளிக்கூடங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அவர்களது பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மனோபாவத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இரண்டு சிறுவர்களையும் ஒரு விடுதியில் சேர்க்க பின்பு...
    • பாண்டிராஜ்
      பாண்டிராஜ்
      Director
    • சூர்யா சிவகுமார்
      சூர்யா சிவகுமார்
      Producer
    • அரோள் கரோலி
      அரோள் கரோலி
      Music Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      பசங்க உலகம் பாண்டிராஜுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.. பிடிபட்டும் இருக்கிறது. முதல் படம் பசங்க அழுத்தமாக இருந்தது... இந்த பசங்க 2 அழுத்தமாக, கூடவே கொஞ்சம் நகரத்துப் பளபளப்புடன் வந்திருக்கிறது.

      குழந்தைகளின் உலகம் வேறு. அந்த உலகைப் பார்க்க, கமர்ஷியல் சமரசங்களில் சிக்கி அல்லாடும் பெற்றோரு வேறு ஒரு மனநிலை தேவைப்படுகிறது என்பதை ரொம்ப கலர்ஃபுல்லாகச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.

      இப்படி ஒரு தம்பதி - குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை... இருந்தா நல்லாருக்கும் என கமல்தனமாக சொல்லத் தோன்றுகிறது, சூர்யா - அமலா மற்றும் அவர்கள் குழந்தைகளைப் பார்க்கும்போது.

      பிஸினஸ், வேலை என பரபரக்கும் தம்பதியருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி பொறுமையாக க்ளாஸ் எடுத்திருக்கிறார்கள் பாண்டிராஜும் சூர்யாவும். கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்!..