twitter
    Tamil»Movies»Pasanga 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பசங்க உலகம் பாண்டிராஜுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.. பிடிபட்டும் இருக்கிறது. முதல் படம் பசங்க அழுத்தமாக இருந்தது... இந்த பசங்க 2 அழுத்தமாக, கூடவே கொஞ்சம் நகரத்துப் பளபளப்புடன் வந்திருக்கிறது.

      குழந்தைகளின் உலகம் வேறு. அந்த உலகைப் பார்க்க, கமர்ஷியல் சமரசங்களில் சிக்கி அல்லாடும் பெற்றோரு வேறு ஒரு மனநிலை தேவைப்படுகிறது என்பதை ரொம்ப கலர்ஃபுல்லாகச் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ்.

      இப்படி ஒரு தம்பதி - குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை... இருந்தா நல்லாருக்கும் என கமல்தனமாக சொல்லத் தோன்றுகிறது, சூர்யா - அமலா மற்றும் அவர்கள் குழந்தைகளைப் பார்க்கும்போது.

      பிஸினஸ், வேலை என பரபரக்கும் தம்பதியருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி பொறுமையாக க்ளாஸ் எடுத்திருக்கிறார்கள் பாண்டிராஜும் சூர்யாவும். கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்!