twitter

    விமர்சகர்கள் கருத்து

    • பேய்கள் (சீஸன்) ஓய்வதில்லை என்பதை தமிழ் சினிமா கால காலமாக மெய்ப்பித்து வருகிறது. இந்த வெள்ளிக்கிழமை வெளியான நான்கு படங்களில் இரண்டு பேய்ப் படங்கள் என்றால், பேய்கள் ஆதிக்கம் கோடம்பாக்கத்தில் எந்த அளவுக்கு கொடிகட்டிப் பறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

      இந்தப் படத்தில் பேயை உருட்டி உருட்டி மரப்பாச்சி விளையாடியிருக்கிறார்கள்.

      இந்தப் படத்தில் பேய் பெரிதாக பயமுறுத்தவில்லை. ஏதோ பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி கொஞ்சம் மென்மையாகவே வந்து போகிறது.

      ஆனால் பேய் வருவதற்கு முந்தைய முக்கால் மணி நேரப் படம் செம கலகலப்பு. பாஸ்கரின் டைமிங் வசனங்கள் நான் ஸ்டாப் சிரிப்புக்கு உத்தரவாதம்.

      வைபவ் இந்தப் படத்தில்தான் இயல்பாக நடித்திருக்கிறார். பக்கா சென்னை லோக்கல் பார்ட்டியாக குத்தாட்டத்திலும் வெளுக்கிறார். ஐஸ்வர்யாவுடனான அவரது காதலின் பின்னணி புதுசாக இருக்கிறது. சேட்டு, சேட்டு என இருவரும் லவ்வும் இடங்கள் அழகு.

      வழக்கமாக தமிழ்ப் பேயை ஓட்ட மலையாள மந்திரவாதி, அல்லது கோவலம் தர்க்கா பாய்களைக் காட்டுவது வழக்கம். இந்தப் படத்தில் இந்தி மந்திரவாதிகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். கொஞ்சம் புதுசாகத்தான் இருக்கிறது.

      வழக்கமான சுந்தர் சி பாணி சிரிப்புப் பேய்ப் படம் எடுப்பதுதான் இயக்குநர் பாஸ்கரின் நோக்கம். முதல் பாதியில் பேயில்லாமலே அது நிறைவேறியிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு பேயிருந்தும் தடுமாறுகிறது.