twitter
    Tamil»Movies»Idhu Namma Aalu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • காதலித்துப் பிரிந்த சிம்பு - நயன்தாராவை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். இது காதல் படம் என்கிறார் இயக்குநர். காதல் படம்தானா? பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

      முதலில் இது படம்தானா? ஒரு காதல் கதையை இப்படியா படமாக்குவார்கள்? காட்சிகளில் ஒரு குறைந்தபட்ச நேர்த்தி இல்லை.

      அழகன் என்ற படத்தில் காதலனும் காதலியும் விடிய விடிய பேசினார்கள் என்ற ஒரு வரியை மூன்று நிமிடப் பாடலாக, கவிதையாக காட்சிப்படுத்தியிருப்பார் கேபி. இந்தப் படத்திலும் அப்படி ஒரு காட்சி. ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள். காரணம் யாராக இருந்தாலும் பழி முழுவதும் இயக்குநர் பாண்டிராஜ் மீதுதான்!

      வசனம் பேசுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை கடித்துத் துப்புகிறார் சிம்பு. காதில் ரத்தம் வராத குறைதான். இவரது நிஜ குணத்தைப் பிரதிபலிக்கும் வசனங்களுக்கு ஏதோ பெரிய காப்பிய ரேஞ்சுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். கூடவே அவ்வப்போது சூரி அடிக்கும் கமெண்டுகள் இன்னும் எரிச்சலூட்டுகின்றன.

      படத்தின் மிகப் பெரிய ஆறுதல் நயன்தாரா. 2020-லும் கூட இவரை அடித்துக் கொள்ள முடியாது போலிருக்கிறது. சில காட்சிகளில் சிம்புவிடம் அவர் காதல் வசப்படுவது செயற்கையாகத் தெரிந்தாலும், இறுதிக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு ப்ளஸ் பாலசுப்பிரமணியம் கேமிரா!

      சந்தானம் இரண்டு காட்சிகளில் வருகிறார். நட்புக்கு மரியாதை. ஆன்ட்ரியாவை தெலுங்குப் பெண்ணாகக் காட்டி, அவரது உச்சரிப்பு கொடுமையை நியாயப்படுத்திவிட்டார் பாண்டிராஜ்.

      இசை..? பாவம்.. சின்னப் பையன். உண்மையைச் சொன்னால் மனசு கஷ்டப்படும்!