twitter

    இணையதளம் கதை

    இணையத்தளம் இரட்டை இயக்குனர்கள் சங்கர் சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் கிரைம் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில், கணேஷ் வெங்கட்ராமன், ஈரோடு மகேஷ், சுகன்யா மற்றும் சுவேதா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்ல் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கோயம்புத்தூரை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

    கதை : 

    கணேஷ் வெங்கடராமன் போலீஸ் உயர் அதிகாரி. ஒரு அடைமழை நேரத்தில் ATM மையத்தில் பணம் எடுக்கும் போது ஒரு மர்ம கும்பல் சிறுவனின் உதவியுடன் பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிக்கிறது.

    ஸ்வேதா மேனன் உளவுத்துறை அதிகாரியாக வருகிறார். இவருக்கு உதவியாக ஈரோடு மகேஷ் பணிபுரிகிறார். வேலையில் வேலை இல்லாமல் இருப்பது போலவே கவலை கொள்ளும் மகேஷிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. 

    சுகன்யாவால் ஸ்வேதாவிற்கு ஒரு பெரிய ஆபத்து வருகின்றது. சுகன்யா தனது கணவன் மற்றும் மகனை இழந்தவர். 

    ஆன்லைன் வழியே டெல்லி கணேஷ் கொலை செய்யப்படுவதை நேரலையாக வெளியிடுகிறார்கள். போலிஸ் எப்படியோ காப்பாற்றிவிட முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாற்றவும் முடியவில்லை.

    இந்த கொலையில் அடுத்து சிக்குவது காமெடியனாக நடித்திருக்கும் ஆடம்ஸ். இவர் பத்திரிக்கை நிரூபராக நடித்திருக்கிறார். இறுதியில் அந்த இணையத்தளம் மூலம்  மகேஷும்  அந்த கொலை வேட்டையில் சிக்கி கொண்டார். அந்த கொலை முயற்சியிலிருந்து மகேஷ் தப்பினாரா ? அவருக்கு என்ன நேர்ந்தது ? 

    இணையதளம் மூலம் கொலை செய்பவர்கள் யார் ? அவர்களை கொலை செய்யவேண்டிய காரணம் என்ன ? இறந்தவர்களுக்கும் கொலையாளிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie இணையதளம் with us? Please send it to us ([email protected]).