twitter

    விமர்சகர்கள் கருத்து

    • பழைய கிரைம் திரில்லர் கதைதான். ஆனால் அதை புதுமையான திரைக்கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ள மு.மாறன். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு கதை. முதல் காட்சியில் வரும் சம்பத்துக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் என்ன தொடர்பு என்பதை ஏகப்பட்ட முடிச்சுகளைப்போட்டு, பின்பாதியில் ஒவ்வொன்றாக அவிழ்த்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சில முடிச்சுகள் அவிழ மறுத்து, இடியாப்ப சிக்கலாக மாறி பார்வையாளர்களை கலங்கடிக்கின்றன.

      தலைப்பில் சொல்லப்பட்டுள்ள ஆயிரம் கண்களில் பத்துக்கண்களையாவது சரியாக காட்டியிருந்தால் பார்வை நன்றாக இருந்திருக்கும். இரவுக்கு ஆயிரம் கண்கள் - பழைய புரியாத புதிர்.