twitter
    Tamil»Movies»Irudhi Suttru»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கோடம்பாக்கத்தில் இப்போதைய ட்ரெண்ட் ஒன்று பேய்... அடுத்தது பாக்ஸிங். குறிப்பாக பாக்ஸிங் பற்றிய சமீபத்திய தமிழ்ப் படங்களில் நல்ல ஒரிஜினாலிட்டி பார்க்க முடிகிறது. சில வாரங்களுக்கு முன்பு பூலோகம். இப்போது இறுதிச் சுற்று.

      இந்த மாதிரிப் படங்களின் கதைகள் ஒரே மாதிரிதான் இருக்கும், சக்தே இந்தியா பாணியில். ஆனால் சொல்லும் விதம்தான் நம்மை இருக்கையில் கட்டிப் போடுவதும் அல்லது விரட்டியடிப்பதும்!

      மாதவன் - ரித்திகா சிங்கின் மிகக் கச்சிதமான நடிப்பும், சுதா கொங்கராவின் அழுத்தமான திரைக்கதையும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.

      இந்தப் படத்தின் அற்புதம் ரித்திகா சிங். புதிய நடிகை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். உதட்டசைவு, உடல் மொழி, பாக்ஸிங் காட்சிகளில் பாவங்கள் என அனைத்தும் கச்சிதம். நிஜத்திலும் பாக்ஸர் என்பதால் வேடப் பொருத்தம் அபாரம்.

      இப்படி ஒரு கதைக்காகத்தான் நான்காண்டுகள் காத்திருந்திருக்கிறார் மாதவன். இந்தக் காத்திருப்பு வீண் போகவில்லை. தம்பிக்குப் பிறகு ரசிக்கும்படியான நடிப்பு. இந்திய விளையாட்டுத் துறையின் மட்டமான அரசியலை அம்பலப் படுத்தும் காட்சிகளில் ஆவேசம் கொள்ள வைக்கிறார், பார்வையாளர்களையும்.

      நல்ல திரைக்கதை, கலைஞர்களின் நேர்த்தியான நடிப்பால் இறுதிச் சுற்றில் அபாரமாக ஜெயித்திருக்கிறார்கள்!