twitter

    ஜெய் ஹிந்த் 2 கதை

    ஜெய் ஹிந்த் 2  இந்திய தமிழ் சினிமா வரலாற்றில் வெளியான அதிரடி மசாலா படம்.  இப்படத்தின் கதாநாயகனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இப்படம் ஒரே நாளில் மூன்று மொழிகளில் வெளியானது. தமிழிலும்,தெலுங்குவிலும் ஜெய் ஹிந்த் 2 என்றும் கன்னடத்தில் அபிமன்யு என்ற பெயரிலும் வெளியானது.இப்படம் ஏ பி ஜே அப்துல் கலாமின் கனவாகிய இந்தியா பின்னாளில் வல்லரசு ஆவதை மையமாக்கி கல்வி திட்டங்களில் உள்ள பிரச்சனைகளை கரு மையமாக கொண்டு முழுமையாக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் அர்ஜுன் ஆவர். 

    ஜெய் ஹிந்த் 2 ஐந்து பேர்களின் பயணம் ஒரு மனிதனிடம் இணைக்கும் கதையாக ஆரம்பமாகிறது. அம்மனிதன், குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடுகிறார். பார்வதி என்ற ஒரு சிறுமி ஏழை குடும்பத்தில் பிறந்து, நகரத்தில் பெரிய பள்ளியில்  அட்மிசன் கிடைக்கிறது. ஆனால்,  அப்பள்ளியில் பணம் கட்ட முடியாமல் அச்சிறுமியின் தந்தை தன் சிறுநீரகத்தை விற்றும், முழுமையாக பணம் கட்ட முடியாததால், அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அபிமன்யுவை (அர்ஜுன் சர்ஜா) ஆழமாக உறுத்துகிறது. அதனால், ஒரு கணினி  சேவை புரியும் பொறியாளர் ஒரே இரவில் கல்வி பொருளாதாரமாக மாற என்ன காரணம் என்பதை கண்டறிகிறார். 

    பின்னர், அபிமன்யு  நாட்டில் இருக்கும் அனைத்து தனியார் பள்ளிகளையும் நட்டுரிமையாக்கவேண்டும் என்று தொலைகாட்சியில் அறிவிக்கிறார்.
    இச்செய்தி தனியார் பள்ளி நிறுவனர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அபிமன்யுவை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அபிமன்யு அவர்களின் திட்டத்திலிருந்து தப்பித்தார? இல்லையா? அவருடைய முயற்சியில் வென்றாரா? இல்லையா? என்பதை  திரையில் அதிரடியாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் அர்ஜுன்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜெய் ஹிந்த் 2 with us? Please send it to us ([email protected]).