twitter
    Tamil»Movies»Jeeva»Story

    ஜீவா கதை

    ஜீவா  2014-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்  காதல் கலந்த விளையாட்டு திரைப்படம், இப்படத்தை சுசீந்திரன்  இயக்கியுள்ளார்  . இப்படத்தின் கதாநாயகனாக  நடிகர் விஷ்ணு மற்றும் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா வும் நடித்துள்ளனர் .  இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர் மஹ்தி, மற்றும் கலை இயக்குனராக ரஜீவன்,  உரையாடல் சந்தோஷ்,  எடிட்டிங் அந்தோணி மற்றும் இப்படத்திற்கு  இசையமைத்திருக்கிறார் டி.இமான்.

    கதை 

    இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் ஒரு நாள் விளையாடும் கனவு கொண்ட ஒரு இளம் ஆர்வலராக  ஜீவா  உள்ளார். படத்தின் ஆரம்பத்தில்  ஒரு பூங்காவில் அமர்ந்து , ஜீவா அவரது வாழ்க்கை கதையை  தொடங்குகிறார். அவர் மிக இளம் வயதில் இருந்து கிரிக்கெட் ஆர்வம். அவரது முன்ணுதாரனம்  என சச்சின் டெண்டுல்கரை என்று கூறுகிறார். ஆரம்பத்தில்  தனது தந்தைக்கு  விருப்பமின்றியும் , பின்னர் அவர் தனது நண்பர் கோரிக்கையை ஏற்று சம்மதிக்கிறார்.  ஜீவா  பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட் அணியில் ஒருவராகிறார். அவர் பின்பு ஒரு நட்சத்திர வீரராக   விளையாட்டில் கருதப்படுகிறார். 

    அவரது செயலை பார்த்து, உள்ளூர் கிரிக்கெட் அணியில்  சேர அவருக்கு அழைப்பு  வந்தது.  ஆனால் அவரது தந்தை , அவரது கல்வி செயல்திறன் காரணமாக கிரிக்கெட் ஏழைகளுக்கு  சரிவராது  என்று கூறி ஏற்கவில்லை , அவர்கள் பயிற்சி வாய்ப்பு வழங்குகிறது ஆனால் அவர்களால் எதிர்காலத்தில் வேலை செய்ய முடியாது என்கிறார். இதற்கிடையில்   ஜீவா தனது பக்கத்து வீட்டு  பெண் மீது காதல் கொள்கிறார்.  அவர்களது குடும்பத்திற்கு  இதை பற்றி தெரிய வரும் போது அவர்களுடாய காதல் பிரிகிறது. இதன்  காரணமாக  ஜீவா துயரத்தை மறக்க  குடிக்க ஆரம்பிக்கிறார். எனவே அவரை மீண்டும் நல்ல செயல்களில் கவனம் செலுத்த செய்ய, ஜீவாவின்  தந்தை அவரை கிரிக்கெட் கிளப்பில்  சேர  ஒப்புக்கொள்கிறார்.

    ஜீவாவின்  பார்ட்னராக  ரஞ்சித் இருந்தார். ஆரம்பத்தில் ஜீவா மீது  ஈகோ மோதல்கள் இருந்தது. ஆனால் பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். அவர்கள்   அணி அதிக பிரிவு போட்டிகளில்  நுழைய தொடங்குகியது.  தமிழ்நாடு ரஞ்சி அணி ஜீவா, ரஞ்சித் இருவரும் தேர்வாவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. வீரர்கள் தேர்வு செய்ய போட்டி வருகிறது. ஆனால் உண்மையில்  சிக்கல் அணி சேர தொடங்குகிறது. தமிழ்நாடு அணி பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த  வீரர்களை தேர்வு செய்தது, ஆனால்  அவற்றில்  ஜீவா, ரஞ்சித் இருவரும் வேறு சமூகத்தில் இருந்து  வந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு   வழங்கப்படும்  வாய்ப்புகளை  ஓரங்கட்டி விடுகிறார்கள்.

    அணியில் இருந்து இருவரையும் நிராகரித்தனர்.  கோபமடைந்த, ரஞ்சித் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி பாரபட்சம் காட்டும் தலைவர் சங்கம் அலுவலகம் முன் ஆரவாரம் செய்தார். ஜீவா, மற்றும் ரஞ்சித் இருவரும் தங்கள்  வாழ்க்கை கிரிக்கெட்டில்  உள்ளது என்று நினைத்தனர். ரஞ்சித் மனமுடைந்து தற்கொலை  செய்து கொண்டார். இதற்கிடையில், ஜீவா பள்ளி நேரம் ஈர்ப்பு ஜென்னி அவரை மீண்டும் சந்திக்கிறார்.  அவர்கள் மீண்டும் காதலிக்கின்றனர்.  அவர்களது  தந்தை  அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்ததுடன்  ஜீவாவிற்கு  ஒரு  உறுதியான  வேலை வேண்டும் என்றார். மேலும்  அவர் கிறித்துவம்  மதம் மாறுகிறார். ஜீவா ஆரம்பத்தில் ஒப்புக்கொள்கிறார் ஆனால் உடனடியாக அவர் கிரிக்கெட் இல்லாமல் வாழ முடியாது என்று ஜென்னியிடம்  கூறகிறார். ஜீவா  அவரது கிரிக்கெட் வாழ்க்கையை  புதுப்பிக்க  கடினமாக பயிற்சி செய்கிறார்.

    பின்னர், ராஜஸ்தான் அணி கேப்டன்  இர்பான்.  ராஜஸ்தான் சி.பி.எல் (IPL) அணி உரிமையிலிருந்து  ஜீவாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. இதனால்  அவர் நேரடியாக தேசிய அணியில்  நுழைய  முடியும்.

    கதை,  மீண்டும் நடப்பிற்கு வருகிறது. தற்போது   அவர் ஒரு நட்சத்திர வீரர். அவர், அங்கு தனது அறிமுக சி.பி.எல் போட்டியில், தனது அனுபவத்தை விவரிக்கிறார்.  ஜீவா கடைசியில் தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார்.  அவர் "மற்ற நாடுகளில் , வீரர்கள் விளையாடி இழக்க; ஆனால் இந்திய வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு  கூட பெறாமல் இழக்கின்றனர்". என்று கூறி தனது பேட்டியை முடிவடைகிறார் ஜீவா.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜீவா with us? Please send it to us ([email protected]).