twitter
    Tamil»Movies»Kaala Koothu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு பழைய கதையை எளிமையாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நாகராஜன். திரைக்கதையில் புதிது என எதுவும் இல்லை. எல்லா காட்சிகளையும் நீளமாக வைத்திருப்பதால், மெகா சீரியல் பார்ப்பது போன்றே இருக்கிறது. திரைக்கதையின் போக்கும் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் வகையில் இருக்கிறது.

      பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி, மகேந்திரன் என படத்தில் வரும் அனைவருக்கும் லேசான மேக்கப் தான் போட்டிருக்கிறார்கள். தங்கள் நடிப்பின் மூலம் படத்தை தூக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார்கள் ஹீரோக்களும், ஹீரோயின்களும். ஆனால் கதையும், திரைக்கதையும் வலுவாக இல்லாததால், அவர்களது உழைப்பு எடுபடாமல் போகிறது. வெள்ளக்காரனிடம் தமிழ் பேசச் சொல்லும் காட்சியும், சரக்கடிக்கும் போதும் மகேந்திரன் செய்யும் ரகளைகளும், பள்ளி பருவ நட்பும் தான் படத்தில் ஆறுதலான காட்சிகள். இயல்பான ஒளிப்பதிவின் மூலம் மதுரையை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர். படம் மித வேகத்தில் பயணிப்பதற்கு எடிட்டர் செல்வாவின் படத்தொகுப்பும் காரணம்.

      தொலைக்காட்சி சீரியல்களிலேயே இதுபோன்ற கதைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் விறுவிறுப்பாக. அப்படி இருக்கும் போது இவ்வளவு பொறுமையாக கதை சொல்லியிருப்பது அலுப்பையே ஏற்படுத்திறது. இதனாலேயே படத்தின் சோக கிளைமாக்ஸ் மனதில் நிற்க மறுக்கிறது.
    • ஒரு பழைய கதையை எளிமையாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நாகராஜன். திரைக்கதையில் புதிது என எதுவும் இல்லை. எல்லா காட்சிகளையும் நீளமாக வைத்திருப்பதால், மெகா சீரியல் பார்ப்பது போன்றே இருக்கிறது. திரைக்கதையின் போக்கும் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் வகையில் இருக்கிறது.

      பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி, மகேந்திரன் என படத்தில் வரும் அனைவருக்கும் லேசான மேக்கப் தான் போட்டிருக்கிறார்கள். தங்கள் நடிப்பின் மூலம் படத்தை தூக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார்கள் ஹீரோக்களும், ஹீரோயின்களும். ஆனால் கதையும், திரைக்கத�