twitter
    Tamil»Movies»Kabali»Story

    கபாலி கதை

    கபாலி இளம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா அப்டே, தன்ஷிகா, ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், ரித்விகா, நாசர் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

    கதை :

    கதை, மலேசியா வாழ் தமிழர்களுக்காக போராடியதால் சிறை சென்று 25 வருடம் கழித்து வெளி வருகிறார் கபாலீஸ்வரர் என்ற கபாலி (ரஜினிகாந்த்). சிறையிலிருந்து வெளிவந்த உடனே "கபாலிடா" என்ற பன்ச் வசனத்துடன் சண்டைக்காட்சியுடன் படம் நகர ஆரம்பிக்கின்றது. 

    சிறையில் இருந்து வெளிவந்த கபாலி தன் குடும்பத்தினை தேட, நடுவினில் ஒரு பிளாஷ்பேக், மலேசியா வாழ் தமிழர்கள் மத்தியில் தலைவராக வலம் வருபவர் நாசர். எஸ்டேட்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தட்டிக் கேட்கிறார். அதேபோல தமிழர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பவர் கபாலீஸ்வரர். அவரது செயல்பாடுகளைப் பார்த்த நாசர் நீதான் தமிழர்களின் தலைவராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்.

    நாசரை ஒரு கும்பல் கொலை செய்ய, கபாலி தலைவராகிறார். அதனை தொடர்ந்து அவர் சந்திக்கும் சறுக்கல்கள், பிரச்சனைகள் அனைத்தும் அவரை சிறையில் அடைக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளிவந்ததும், எதிரிகளை எவ்வாறு பழிவாங்குகிறார்..? தன் குடும்பத்தை கண்டுபிடித்தாரா..? என்பதே மீதிக்கதை.

    இடைவேளைக்கு பிறகு கதை வேறு ஒரு ரூட்டில் பயணிக்க, கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் வருமோ என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பில் படம் முடிகின்றது.
    **Note:Hey! Would you like to share the story of the movie கபாலி with us? Please send it to us ([email protected]).