twitter
    Tamil»Movies»Kakka Muttai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பெரிய நடிகர்களில்லை... பிரமாண்ட காட்சிகளில்லை.. அச்சு பிச்சு காமெடியுமில்லை... இப்படி ஏகப்பட்ட இல்லைகளோடு வந்திருக்கும் ஒரு சிறிய படம் பார்ப்பவர்களை இருக்கையோடு கட்டுப்போடுகிறது. அதுதான் காக்கா முட்டை.

      வணிக ரீதியான படங்களில் நடித்தாலும், இயக்கினாலும் இப்படி ஒரு கதையைப் படமாகத் தயாரித்த தனுஷ், வெற்றிமாறனின் தொலைநோக்கைப் பாராட்டியாக வேண்டும்.

      காக்கா முட்டை பிரதர்ஸாக வரும் விக்னேஷ், ரமேஷ் இருவரையும் சினிமாவில் நடித்த குழந்தைகளாகப் பார்க்கவில்லை. சைதாப்பேட்டை பாலத்தையொட்டி வாழும் சிறுவர்களாகவே பார்க்க முடிந்தது. தேசிய விருதுக்கு தகுதியானவர்கள்தான்.