twitter

    கணிதன் கதை

    கணிதன் இயக்குனர் சந்தோஷ் டி என் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா, பாக்யராஜ், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ள இந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் டிரம்ஸ் சிவமணி. இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார் கலைபுலி எஸ் தாணு.

    கதை :

    நரேன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகின்றார். அவர் எப்படியாவது பி பி சி தொலைக்கட்சியில் பணிபுரிய வேண்டும் என்பது அவருக்கு இருக்கும் நீண்ட நாள் ஆசை. இறுதிவரை அக்கனவு நிறைவேறாமல் போக, மகன் அதர்வா, தன் தந்தையின் கனவை தான் நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சிக்கின்றார். 

    அதுவரை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே பி பி சி-யில் முயற்சித்து வருகிறார். அதே சமயம் மற்றொரு புறம் அதர்வா பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி மனோபலாவின் மகளான கேத்தரின் தெரசாவை காதலிக்கின்றார்.

    திடிரென்று ஒருநாள் வங்கிகளில் போலி சான்றிதழ் மூலம் பணம் வாங்கியுள்ளதாக அதர்வாவினை கைதுசெய்கின்றனர். முதலில் ஏன், எதற்கு என குழம்பும் அதர்வாக்கு, பின்னர் தன்னை போலவே பலரின் சான்றிதழ்கள் போலியாக வங்கிகளில் பயன்படுத்தி பணம் எடுத்துள்ளனர் என கண்டறிகின்றார். 

    அதர்வா சிறையினை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் அக்கும்பலை பற்றி ஆராய்கிறார். அவரது முயற்சி வெற்றி அடைந்ததா? அவரது தந்தையின் பி பி சி கனவை நிறைவேற்றினாரா? என்பது மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie கணிதன் with us? Please send it to us ([email protected]).