Tamil » Movies » Kavalai Vendam » Story

கவலை வேண்டாம் (U/A)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

24 Nov 2016
கதை
கவலை வேண்டாம் இயக்குனர் டிகேயின் இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர் ஜேபாலாஜி மற்றும் பாபி சிம்ஹா நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம்.

கதை :

ஜீவா (அரவிந்த்) , காஜல் அகர்வால் (திவ்யா) , ஆர்ஜே பாலாஜி (நட்ராஜ்), பாலா சரவணன் (சதிஷ்) ஆகிய நால்வர் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள். இதில் ஜீவாவும், காஜலும் காதலித்து திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், திருமணமான குறுகிய காலத்தில் இருவரும் பிரிந்துவிடுகின்றனர். 

பின்பு, பாபி சிம்ஹா (அர்ஜுன்) மற்றும் காஜலுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இரண்டாவது திருமணத்திற்கு முன்பு ஜீவாவிடம் இருந்து முறைப்படி விவாகரத்து கேட்கிறார் காஜல். ஆனால், ஜீவா தன்னுடன் ஒரு வாரம் தங்கினால் விவரகரத்து தருவதாக நிபந்தனை விதிக்கிறார். அதற்க்கு சம்மதித்து வேறு வழியில்லாமல் தங்குகிறார் காஜல். 

நண்பர்களுடன் இருக்கும் ஜீவாவை காதலிக்கும் சுனைனா (தீபா) அடிக்கடி வந்து செல்கிறார். இறுதியில் யாருடைய காதல் வெற்றிபெற்றது என்பதே மீதிக்கதை.

Buy Movie Tickets