twitter
    Tamil»Movies»Kidari»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையே துரோகம், ரத்தம் கொப்பளிக்கும் வன்முறை, அடாவடி, மூர்க்கத்தனம்தான் என்பதை வலியுறுத்துவது போல வந்திருக்கும் இன்னொரு சசிகுமார் படம் கிடாரி.

      ஒரு மாற்றத்துக்காகவாவது, இதெல்லாம் இல்லாத, இயல்பான வாழ்க்கையை வாழும் எளிய கிராமத்து மனிதர்களின் கதையைச் சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கமே வந்துவிடுகிறது கிடாரி பார்த்து முடிக்கும்போது. அப்படி ஒரு கொலவெறியுடன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் பிரசாத் முருகேசன்.

      ஏற்கெனவே காதலிக்க மறுத்ததற்கெல்லாம் அருவாளைத் தூக்கி மண்டையைப் பிளந்து கொண்டிருக்கும் சூழலில் இவ்வளவு ரத்தவெறியூட்டும் கதைகள், படங்கள் தேவையா?

      படத்தின் முதுகெலும்பு என்றால் அது வேல ராமமூர்த்திதான். அப்பப்பா... என்ன ஒரு அபார உடல் மொழி! கையில் வேல் கம்போடு அவர் நடந்து வரும் கம்பீரம் பிரமாதம். ராஜ்கிரணுக்குப் பிறகு இப்படி கேரக்டர் ரோலில் அசரடிப்பவர் வேல ராமமூர்த்திதான்.

      ஹீரோயின் நிகிலாவுக்கு ஒரே ஒரு காட்சியில்தான் நடிக்க வாய்ப்பு.

      நெப்போலியனின் மறுவரவாக அமைந்திருக்கிறது இந்தப் படம். பத்து நிமிடங்களே வந்தாலும் கம்பீரமாக மனதில் நிற்கிறார்.

      எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு சாத்தூர் மற்றும் சுற்றுப் புறங்களில் நாம் நடமாடுவது போன்ற உணர்வைத் தருகிறது.

      தர்புகா ஷிவாவின் பாடல்களை விட, பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது.

      படத்தின் கதை, அதை திரைக்கதையாக்கிய விதம் இரண்டும்தான் படத்தின் பலவீனம். கொஞ்ச நாளைக்கு துரோகம், பழிக்குப் பழி, ரத்தச் சகதி க்ளைமாக்ஸ் போன்றவற்றை தூக்கி பரணில் போட்டுவிட்டு, மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடிக்கும், இயல்பான மனித வாழ்க்கையைச் சொல்லும், மனசை லகுவாக்கும் நகைச்சுவைப் படங்களாக எடுங்கள். மக்களின் ஆயுசு கொஞ்சமாவது கூடட்டும்!