twitter
    Tamil»Movies»Kodi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தனுஷுக்கே அளவெடுத்துத் தைத்த சட்டை மாதிரி ஒரு அரசியல் கதை.

      ஓவர் அரசியல் கிடையாது. மாவட்ட அளவில் வளரும் அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த நகர்வுகள், விரோதங்கள், துரோகங்கள்தான் கதையின் அடிநாதம்.

      இரட்டை வேடங்களில் முதல் முறையாக தனுஷ். ஏனோ வேலையில்லா பட்டதாரி தனுஷ் - அவர் தம்பி நினைவுக்கு வருகின்றனர். அரசியல்வாதி தனுஷ் மனசுக்குள் நிற்கிறார். அந்தப் பார்வை, தாடி, எதிராளிகளை அசராமல் எதிர்கொள்ளும் விதம்... என அனைத்திலும் தனுஷ் முத்திரை.

      இரண்டு நாயகிகள். அனுபமா பரமேஸ்வரனுக்கு வழக்கமான நாயகி வேடம்தான். த்ரிஷாவுக்குதான் 'ஹெவி வெயிட்' வேடம். அதை அவரால் தாங்க முடியவில்லை என்பது பல காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.

      எஸ்ஏ சந்திரசேகர், விஜயகுமார், கருணாஸ், காளி வெங்கட் என நிறைய பாத்திரங்கள். ஆனால் தனியாக காமெடி எதுவும் இல்லாதது கொஞ்சம் வெறுமைதான்.

      எந்தக் கழகம் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினைகள் தீரப் போவதில்லை... மக்கள்தான் அவற்றை அனுபவித்தாக வேண்டும் என்பதை ஒரு தொழிற்சாலையின் பாதரசக் கழிவை மையப்படுத்தி சொல்லியிருப்பது சிறப்பு. இன்றைய அவசியமும் கூட.

      இடைவேளை வரை கதையின் போக்கு வித்தியாசமாக இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு அடுத்த காட்சி என்ன என்பதை எளிதாகவே யூகிக்க முடிவதுதான் இந்தப் படத்தின் பலவீனம்.

      வெங்கடேஷின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை இரண்டுமே படத்துக்கு ப்ளஸ். ஆனால் எல்லா படத்திலும் பின்னணிக்கென்று ஒரு வசனப் பாடலைப் பாணியை மாத்திக்குங்க சந்தோஷ்!

      கதைக்களத்தை வித்தியாசமாக சிந்தித்த இயக்குநர், திரைக்கதையின் இரண்டாம் பகுதியை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், கொடிகட்டிப் பறந்திருக்கும் இந்தப் படம்!