twitter
    Tamil»Movies»Kolanji»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் சங்கவி. ஒரு காலத்தில் கிளாமர் ஹீரோயினாக விஜய், அஜித்துடன் ஜோடிபோட்டவர், இரண்டு பிள்ளைகளின் தாயாக, அன்பான மனைவியாக நிறைவாக நடித்திருக்கிறார். இனி சங்கவியை நிறைய படங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

      படத்தின் ஷோ ஸ்டீலர்ஸ், கிருபாவும் நசாத்தும் தான். கொளஞ்சி கேரக்டருக்கு கிருபா செம பிட். வாட் சொல்லிங் நண்பா என ஆங்கிலமும் தமிழும் கலந்து நசாத் பேசும் வசனங்கள் காமெடி வெடி. எனது ரோல் இது தான் என்பதை உணர்ந்து அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் ராஜாஜ். ஹீரோயின் நைனாவுக்கும் ஒரு சபாஷ் பார்சல்.

      படத்தின் தயாரிப்பாளர் என்பதால், ஒரு காட்சியில் மட்டும் தலைக்காட்டிவிட்டு நகர்கிறார் மூடர் கூடம் நவீன். ஸ்பெஷல் அப்பியரன்ஸ் சென்ராயன், வடிவேலு ஸ்டைலில் டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கிறார். ஆனால் ரசிக்க தான் முடியவில்லை.