twitter

    கொளஞ்சி கதை

    கொளஞ்சி இயக்குனர் தனராம் சரவணன் இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் சங்கவி இணைந்து நடித்த குடும்ப திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குனர் நவீன் தயாரிக்க, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார்.

    மகன் மற்றும் அப்பாவின் பாசத்தை கதைக் கருவாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி மற்றும் படத்தொகுப்பாளர் அதியப்பன் சிவா இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    கதை
    இப்படத்தின் நாயகன் சமுத்திரக்கனி தனது மனைவி சங்கவி உடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வருகிறார், இவர்களுக்கு 2 புதல்வர்கள் உண்டு. இவர்களின் முத்த மகன் சிறு பிள்ளைத்தனமாக செய்யும் சேட்டைகள் சமுத்திரக்கனிக்கு ஊருக்குள் அவப்பெயரை உண்டாக்குகிறது. அதனால் சமுத்திரக்கனி மூத்த மகனிடம் சற்று கண்டிப்பாக நடந்து கொள்கிறார்.

    தன்னிடம் கண்டிப்பாகவும், தம்பியிடம் பாசமாக இருக்கும் சமுத்திரக்கனி-யின் மேல் மூத்த மகனுக்கு கோபம் அதிகரிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையால் பிரியும் சமுத்திரக்கனி - சங்கவி தம்பதியினர் மூத்த மகனை அம்மாவும், இளைய மகனை அப்பாவும் பிரித்து கொண்டு செல்கின்றனர்.

    தன் அப்பாவை விட்டு தனியாக அம்மாவுடன் வாழும் மூத்த மகன் அப்பாவை புரிந்துகொண்டு மீண்டும் இக்குடும்பம் ஒன்று சேர்வதே இத்திரைப்படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie கொளஞ்சி with us? Please send it to us ([email protected]).