twitter
    Tamil»Movies»Komban»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இந்தப் படம் வந்தால் தென் மாவட்ட மக்கள் வெட்டிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பார்கள் என்று சிலர் கடந்த ஒரு வாரமாக கொம்பனுக்கு எதிராக கொடி பிடிக்க, அப்படி என்னதான்யா சொல்லியிருக்காங்க என்று படம் பார்க்கும் ஆர்வம் 'சினிமாவே பிடிக்காது' என்று சொல்பவர்களுக்கும் கூட வந்திருக்கும்.

      படத்தில் அப்படி எந்த வில்லங்கமும் இல்லை. ஒரு அழகான கிராமத்துக் கதை. குறிப்பிட்ட சாதிக்குள் நடக்கிற சம்பவங்கள்தான் என்றாலும், சாதிப்பெயரைக் கூட எங்கும் குறிப்பிடவில்லை.

      வேல்ராஜின் ஒளிப்பதிவு அத்தனை யதார்த்தம். எந்தக் காட்சியிலும் சினிமாத்தனமே எட்டிப் பார்க்காத அளவுக்கு, குறிப்பாக சண்டைக் காட்சிகளில் வேலை பார்த்திருக்கிறார். அதே போல ஜீவி பிரகாஷ். ரொம்ப நாளைக்குப் பிறகு அவரது பாடல் கறுப்பு நிறத்தழகி. மனசில் ஒட்டிக் கொள்கிறது. பின்னணி இசையும் மிகப் பொருத்தம்.