twitter

    குற்றம் 23 கதை

    குற்றம் 23 இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த திரில்லர் திரைப்படத்தில், அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

    கதை :

    படத்தின் ஆரம்பத்தில் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தேவாலயத்திற்கு ஜெஸ்ஸிகா (மிஷா கோஷல்) என்ற கர்பிணிப் பெண் பாவமன்னிப்பு கேட்க வருகிறார். அப்பொழுது பாதிரியார் கொல்லப்பட, ஜெஸ்ஸிகா சிலரால் துரத்தப்பட்டு காணாமல் போகிறார். 

    காணாமல் போன ஜெஸ்ஸிகாவின் கணவர் ஒரு பெரிய தொழிலதிபர். அவர் தன் மனைவிற்க்காக போலீஸ் கமிஷ்னரான விஜயகுமாரிடம் உதவி நாடுகிறார். அந்த வழக்கு வெற்றிமாறனிடம் (அருண் விஜய்) வருகிறது. அந்த நேரத்தில், பாதிரியார் இறந்து விட்டதாக தகவல் கூறுகிறார் தென்றல் (மஹிமா நம்பியார்). 

    அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் காணாமல் போன தொழிலதிபரின் மனைவி ஜெஸ்ஸிகா ஒரு குப்பைக்கிடங்கில் பிணமாக கிடக்கிறார். ஒரு மழலையர் பள்ளியில் ஆசியையாக பணிபுரியும் தென்றல் மூலம் சில துப்புகள் கிடைக்க, அவரை அடிக்கடி சந்திக்கிறார் வெற்றிமாறன். 

    இது தென்றலின் பெற்றோருக்கு எரிச்சலூட்ட, வெற்றிமாறன் தென்றலை காதலிப்பதாகவும், திருமணம் செய்துவைக்க தென்றலின் பெற்றோரிடம் வெற்றிமாறன் கூற, அவர்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர். 

    இந்நிலையில், திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் கழித்து வற்றிமாறனின் அண்ணி அபிநயா கர்பமடைகிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால், தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின்னரே தெரியவருகின்றது அது தற்கொலை இல்லை. கொலை என்று. 

    தொடர்ந்து கர்ப்பிணிகள் கொலை செய்யப்படுவதை விசாரிக்க முழு வீச்சுடன் களத்தில் இறங்குகிறார் வெற்றிமாறன்.  அதன் பின்னர் கதையில் வரும் த்ரில்லர் திருப்பங்கள் தான் படத்தின் மீதிக்கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie குற்றம் 23 with us? Please send it to us ([email protected]).