twitter

    மாவீரன் கதை

    மாவீரன் - இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஸ்க்கின், சரிதா என பல முக்கிய தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அருண் விஷ்வா தனது சாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

    அதிரடி, நகைச்சுவை என தமிழ் பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக இப்படம் உருவாகி 2023 ஜூலை 14ல் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.

    சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தினை தமிழ் பட நடிகர் மற்றும் தமிழக சட்டசபை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார். 

    மாவீரன் படத்தின் ஓடிடி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான செயற்கைக்கோள் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.




    மாவீரன் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    அதிகாரத்தால் எளிய மக்களின் உரிமை & உடமைகளை பறிக்கும் அதிகாரிகளை எதிர்த்து நிற்பதே மாவீரனுக்கு அழகு. என்பதே இப்படத்தின் கதைக்கரு.

    கதை

    சென்னையில் நகர மேம்பாட்டு திட்டத்திற்காக குப்பத்து மக்களை ஹவுசிங் போர்டு என்னும் இடத்திற்கு அரசாங்கம் மாற்றுகிறது. தாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்த இடத்தை காலி செய்யுமாறு அரசாங்கத்திடம் இருந்து வரும் நோட்டீஸ் அடிப்படையில் தங்களின் இடத்தை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு அங்கு வாழும் மக்கள் மாறுகின்றனர்.

    அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். இவரது அம்மாவாக சரிதா மற்றும் தங்கையாக மோனிஷா நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஒரு ஓவிய கலைஞர் ஆவார். ஹவுசிங் போர்டு வீட்டிற்கு செல்லும் குப்பத்து மக்கள், அங்கு தங்களின் இடுப்பிடமாக மாற்றி சூழலுக்கு ஏற்றவாறு மாறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

    ஹவுசிங் போர்டு வீடுகள் சரியான முறையில் உருவாக்கப்படவில்லை. அதிகாரிகளின் ஊழலால் அங்கு வீடுகள் பல சேதாரங்களை கொண்டுள்ளது. இருப்பினும் சிலவற்றை சகித்து கொண்டு மக்கள் வாழ்கின்றனர். சிவகார்த்திகேயன் பயந்த சுபாவம் கொண்டவர். இந்த தரமில்லாத வீட்டை கண்ட சிவகார்த்திகேயன் மக்களுக்காக குரல் எழுப்புகிறார். ஆனால் ஒன்றும் மாறாத நிலையில் சிவகார்த்திகேயன் விரக்தி அடைந்து தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

    சிவகார்த்திகேயனுக்கு வானத்தில் இருந்து (விஜய் சேதுபதி)யின் குரல் கேக்கிறது. அந்த குரல் இவரின் வாழ்வை மொத்தமாக மாற்றுகிறது. சாதுவாக வாழும் சிவகார்த்திகேயனை வீரனாக மாற்றுகிறது.

    சிவகார்த்திகேயனை மாவீரனாக அந்த குரல் மாற்ற, நகர மேம்பாட்டு அமைச்சரான மிஸ்க்கின்-யை சிவகார்த்திகேயன் எதிர்க்கிறார். இறுதியில் என்ன ஆனது? ஏன் அந்த குரல் சிவாவுக்கு மட்டும் கேக்கிறது? யார் அவர்? என்பதே படத்தின் கதை.

    மாவீரன் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

    மாவீரன் படத்தின் இயக்குனர் மடோன்னே அஸ்வின், 2021ஆம் ஆண்டு வெளியான மண்டேலா படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், விருமன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான அதிதி ஷங்கர் இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிதி ஷங்கர் நாயகியாக இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதும் பல சர்ச்சைகள் தமிழ் சினிமாவில் எழுந்தன.

    மாவீரன் படத்தில் வில்லனாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மிஸ்க்கின் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் இப்படத்தில் அரசியல்வாதியாக அமைந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரல் அளித்துள்ளார். தெலுங்கில் இப்படத்திற்கு தெலுங்கு பட ஸ்டார் நடிகர் ரவி தேஜா குரல் அளித்துள்ளார்.

    மாவீரன் திரைப்படம் முதலில் 2023 ஆகஸ்ட் 11ல் விநாயகர் சதுர்த்தி தின ஸ்பெஷல் ரிலீஸ் படமாக வெளியிட திட்டமிட்ட நிலையில், அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியாகும் என வெளியான அதிகாரப்பூர்வ தகவலை தொடர்ந்து மாவீரன் படத்தினை 2023 ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டனர், படக்குழுவினர்.

    மாவீரன் திரைப்படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் 33 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. மாவீரன் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 35 கோடிகள் என படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் தயாரிப்பு செலவை கொடுத்து அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மாவீரன் படத்தினை வாங்கியுள்ளது. மேலும் மாவீரன் படத்திற்கு வரவிருக்கும் அணைத்து வசூல்களும் இப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் தான்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மாவீரன் with us? Please send it to us ([email protected]).