twitter
    Tamil»Movies»Masss (Mass)»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இன்றைய பேய்க் கதை ட்ரெண்டைப் பயன்படுத்தி வெங்கட் பிரபுவும் சூர்யாவும் ஒரு மாஸ் பேய்ப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள். பேய்கள் என்றாலே பயம், பயங்கரம் என்ற நினைப்பை மாற்றி, அவற்றை தோளில் கைபோட்டு நட்பு பாராட்டும் தோழர்களாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.

      கதை.. ரொம்ப சிம்பிள்.. பழசும் கூட. தன் குடும்பத்தை அழித்தவர்களை, மகன் வளர்ந்து பழிவாங்குகிறான் என்ற ஒற்றை வரிக் கதையை, பேய்கள் மற்றும் தனது வழக்கமான துருப்புச் சீட்டு பிரேம்ஜியைக் கொண்டு கலகலப்பாகவும் உருக்கமாகவும் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு.

      வெங்கட் பிரபுவிடம் பிடித்த விஷயமே, வழக்கமான விஷயத்தைக் கூட ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தரும் புத்திசாலித்தனம்தான். அது இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸான மாதிரி தெரிந்தாலும், ஒரு முறை ரசித்துப் பார்க்கும்படியான படம்தான் இந்த மாசு!