twitter
    Tamil»Movies»Miruthan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தொடர்ந்து நான்கு வெற்றிகள் தந்த ஜெயம் ரவியும் வெற்றி லட்சுமியாக வலம் வந்த லட்சுமி மேனனும் இணைந்த முதல் படம் மிருதன். ப்ளஸும் ப்ளஸும் சேர்ந்தால் ப்ளஸ் என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில்....? வாங்க, பார்க்கலாம்!

      மேற்கத்திய நாடுகளின் சினிமா திரைக்கதைப் பாணியைப் பின்பற்றி மிருதனை உருவாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இடைவேளைக்குப் பிறகு பொறுமையைச் சோதிக்கின்றன காட்சிகள். ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க மீண்டும் அந்த விறுவிறுப்பு வந்துவிடுகிறது.

      ஆனால் பல காட்சிகள் பக்கா சினிமாத்தனம். மிருக மனிதர்களுக்கு தண்ணீர்தான் எமன் என்று நன்றாகத் தெரிகிறதே. அந்த டெக்னிக்கை ஆரம்பத்திலேயே கையாண்டிருக்கலாமே?

      நடிப்பில் குறை வைக்கவில்லை ஜெயம் ரவி. படத்தைத் தாங்கியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவரது அனுபவம் பளிச்சிடுகிறது.

      இமானின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை வழக்கம் போல ஒப்பேத்தல்தான்.

      கதையை வித்தியாசமாக தேர்வு செய்த இயக்குநருக்கு, காட்சிகளை சுவாரஸ்யமாக எடுக்க முடியாமல் போனதுதான் இந்தப் படத்தின் துரதிருஷ்டம்!