twitter
    Tamil»Movies»Rajini Murugan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கொஞ்சம் ஆக்ஷன், ஏகத்துக்கும் நகைச்சுவை, முக்கிய வில்லனே காமெடியனாக மாறுவது, துருப்புச் சீட்டு மாதிரி ஒரு சீனியர் நடிகர்... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தந்த இயக்குநர் பொன்ராமுக்கு பிடிபட்டுவிட்ட வெற்றி ஃபார்முலா!

      இந்த ஃபார்முலாவை வைத்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைத் தந்திருக்கிறார். படத்தின் தலைப்பே இது எந்த மாதிரி படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. எதிர்ப்பார்ப்போடு போகும் யாரையும் ஏமாற்றாத கலகல திரைக்கதை, படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் உட்கார வைத்து விடுகிறது.

      சிவகார்த்திகேயனுக்கு நடிப்புக்கு சவால் விடுவது மாதிரியான வேடமெல்லாம் இல்லை. அதே வவச -வின் நீட்சிதான் இந்த ரஜினி முருகன். பிடித்த, பழகிய வேலை என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவா.

      சில பழகிய காட்சிகள், பழகிய திரைக்கதைதான் என்றாலும்... கொண்டாட்ட மனநிலையுடன் கொட்டகைக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை ரஜினி முருகன்!