twitter
    Tamil»Movies»Rummy»Story

    ரம்மி கதை

    ரம்மி, 2014 ஜனவரி 31 ல் வெளிவந்த ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். விஜய் சேதுபதி, காயத்ரி, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை கே.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் பீட்சா படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன், இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கதை புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

    கதை

    இனிக்கோ பிரபாகர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லூரிக்குப் படிக்க வருகிறார். அவருக்குக் கூடப் படிக்கும் பூலாங்குறிச்சி காயத்ரிடன் காதல். இனிக்கோவின் தோழன் விஜய் சேதுபது மற்றும் சூரி. பக்கத்து ஊரைச் சேர்ந்த சையத் காயத்ரிக்காகவே அதே கல்லூரியில் சேர்கிறார். ஒரு கட்டத்தில் இனிக்கோ சக்திக்கும், சையத்துக்கும் மோதல் வெடிக்கிறது. ரவுடிகளைக் கூட்டிப் போய் கல்லூரி விடுதியில் சண்டை போடுகிறார். அதனால் கல்லூரி நிர்வாகம் சையத்தைக் கல்லூரியை விட்டு நீக்குகிறது. சக்தியையும் ஜோசப்பையும் கல்லூரி விடுதியை விட்டு மட்டும் நீக்குகிறது.

    அவர்கள் பூலாங்குறிச்சி கிராமத்தில் சூரி உதவியுடன் வீடு எடுத்துத் தங்குகிறார்கள். ஜோசப்புக்கும், ஜஸ்வர்யா என்கிற உள்ளூர்ப் பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஊர்ப் பெரியவருக்கு தன் தம்பி மகளான காயத்ரியின் காதல் விவகாரம் தெரிகிறது. இனிகோ தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த சமயம் ஐஸ்வர்யாவிற்குக் திருமண ஏற்பாடுகள் நடக்க, விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யாவும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். ஐஸ்வர்யா ஊர்ப் பெரியவரின் மகள் என்பது அப்போதுதான் தெரிய வருகிறது. பெரியவரின் ஆட்கள் ஜோசப்பைக் கொன்று ஐஸ்வர்யாவை அழைத்து வருகிறார்கள். பெரியவர் ஐஸ்வர்யாவையும் கொல்லத் துணிகிறார். இதையெல்லாம் காயத்திரி கேட்டுவிடுகிறார். தனக்கும் இனிகோவிற்கும் இந்த நிலைதான் நடக்கும் எனப் பரிதவிக்கிறார். ஆனால் அவர்கள் காயத்திரியைப் பார்த்துவிடுகிறார்கள். 

    காயத்திரி - இனிகோ காதல் சேர்ந்ததா, ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டாரா என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.பாலகிருஷ்ணன். கதை முழுவதும் 1987இல் நடக்கிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie ரம்மி with us? Please send it to us ([email protected]).