twitter
    Tamil»Movies»Saithan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முன்ஜென்ம கதை. அமரர் சுஜாதாவின் 'ஆ' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என்றெல்லாம் வந்த செய்திகள் சைத்தானுக்கு ஒரு வித எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது என்னமோ உண்மைதான்.

      படம் முழுக்க விஜய் ஆன்டனியையே காட்டிக் கொண்டிருப்பது கொஞ்சமல்ல, ரொம்பவே சலிப்புத் தட்டுகிறது. கொஞ்சம் மற்றவர்களையும் நடிக்க விடுங்க பாஸ்!

      சுஜாதாவின் ஆ கதை எழுதப்பட்ட விதம், ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவர் முடித்த ஸ்டைல் செம்மையாக இருக்கும். அதை அப்படியே திரைக்கதைப்படுத்தியிருந்தால் இந்தப் படம் வேற லெவல். ஆனால் பின்பாதியில் சொந்தச் சரக்கு சேர்க்கிறோம் என்ற பெயரில் சொதப்பிவிட்டார்கள்.

      சாப்ட்வேர் எஞ்ஜினீயர், சாஃப்ட் தமிழ் ஆசிரியர் என இரண்டு வேடங்களில் விஜய் ஆன்டனி. வேடமெல்லாம் ஓகே.. ஆனால் இவ்வளவு மென்மையான ஆசாமி, கடைசியில் மசாலாப்பட ஹீரோக்கள் மாதிரி எதிரிகளைக் காற்றில் பறக்க விட்டு அடிப்பதைப் பார்த்து தியேட்டர் சிரிக்கிறது. காதல் காட்சிகள் விஜய் ஆன்டனிக்கு இன்னும் ஆசிட் டெஸ்ட் மாதிரிதான் உள்ளன.

      அருந்ததி நாயர் அழகு. ஆனால் அவரது பாத்திரப்படைப்பில் செம குழப்பம்.

      முருகதாஸ் பாத்திரம் சின்னச் சின்ன வசனங்களில் சிரிக்க வைத்தாலும், அவர் பாத்திரத்தை இன்னும் கவனமாகச் செதுக்கியிருக்கலாம்.

      பின்னணி இசையில் மிரட்டி இருக்கும் விஜய் ஆன்டனி, ஒரு பாடலில் மட்டும் ஜெயித்திருக்கிறார். மற்ற பாடல்கள் நான்கைந்து இன்டர்வெல்லுக்கு சமம்.

      முதல்பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், ரசிகர்கள் மனசில் நிற்கவேண்டிய இரண்டாம்பாதி சவசவ வென கடந்து போவதால், படம் குறித்து எந்த அபிப்பிராயமும் இல்லாமல் வெளியில் வரவேண்டியிருக்கிறது.