twitter
    Tamil»Movies»Sarvam Thaala Mayam
    சர்வம் தாளமயம்

    சர்வம் தாளமயம்

    U | 2 hrs 11 mins | Drama
    Release Date : 01 Feb 2019
    3.5/5
    Critics Rating
    5/5
    Audience Review
    சர்வம் தாளமயம் இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், அபர்ணா பாலமுரளி, சீனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம். மேலும் இப்படத்தினை தயாரிப்பாளர் லதா மேனன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

    டிசம்பர் 28ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சர்வம் தாளமயம் காரணமின்றி வெளிவராததால், தற்போது பிப்ரவரி 1 முதல் இப்படத்தினை எதிர்பாக்கலாம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

    • ராஜிவ் மேனன்
      ராஜிவ் மேனன்
      Director
    • லதா மேனன்
      லதா மேனன்
      Producer
    • ஏ ஆர் ரஹ்மான்
      ஏ ஆர் ரஹ்மான்
      Music Director
    • பில்மிபீட்
      3.5/5
      மிருதங்கம் செய்து விற்கும் ஏழை தொழிலாளி ஜான்சன் (குமரவேல்), சூப்புக்கடை நடத்தும் தெரசா தம்பதியின் மகன் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்). கல்லூரி படிக்கும் பீட்டர் ஒரு தீவிர விஜய் ரசிகன். இதன் காரணமாகவே அவனது படிப்பு தடைபடுகிறது. இதற்கிடையே நர்ஸாக வேலைபார்க்கும் சாரா (அபர்ணா முரளி) மீது காதல் கொள்கிறார். பீட்டருக்கு இயல்பாகவே நன்றாக மேளம் வாசிக்க வருகிறது.

      கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சர்வம் தாளமயம். அதனாலோ என்னமோ தரத்தில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாமல் வந்திருக்கிறது படம். ராஜீவ் மேனனுக்கே உரித்தான தனி ஸ்டைலில், படம் பல மொழிகளை பேசுகிறது.

      கர்நாடக சங்கீதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது மட்டும் தானா என்ற கேள்வியை முன்வைத்து, அதற்கு விடையும் சொல்கிறது சர்வம் தாளமயம்...