twitter
    Tamil»Movies»Sei»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நீண்ட நாட்களுக்கு பிறகு நகுல் நடித்திருக்கம் படம். ஓப்பனிங் சாங், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி என தனது வழக்கமான கமர்சியல் பாணியில் பயணித்திருக்கிறார். ஓப்பனிங் பாடலில் சூப்பராக டான்ஸ் ஆடியிருக்கிறார். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மெனக்கெட்டிருக்கிறார்.

      புதுமுகம் ஆஞ்சலுக்கு இந்த படத்தில் பெரிதாக வேலை ஏதும் இல்லை என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். மற்றொரு நாயகியான அஞ்சலி ராவ்வும் தனது கடமையை சரியாக செய்திருக்கிறார்.

      மனித உறுப்புகள் திருட்டை மையமாக வைத்து ஏற்கனவே நிறைய படங்கள் வந்துவிட்ட நிலையில், அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு வித்தியாசமான திரைக்கதை மூலம் செய் திரைப்படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்பாபு. படத்தின் ஆரம்ப காட்சிகள் பார்வையாளர்களை படத்துக்குள் ஈர்க்கின்றன. குறிப்பாக இடைவேளை பிளாக் சுவாரஸ்யத்தை தூண்டுகிறது.

      ஆனால் நகுலின் அறிமுகத்துக்கு பின்னான காட்சிகள் படுகமர்சியலாக அமைந்திருப்பதால் கதையின் ஓட்டத்தில் இருந்து திசை மாறிவிடுகின்றது. சம்மந்தமில்லாத காட்சிகளை அமைத்து, அதை ஒன்றுக்கொன்று முடிச்சுபோட முயன்றிருக்கிறார் இயக்குனர். அது ஓரளவுக்கு ஒர்கவுட் ஆகியிருக்கிறது.

      வில்லனுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள், யார் இவர் என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்டுகின்றன. ஆனால் இவர் தான் அவர் என சொன்ன பிறகு, சப்பென்று ஆகிவிடுகிறது. அதபோல், க்ளைமாக்சில் வில்லனுக்கு ஏன் இத்தனை பெரிய வசனம் என்பதும் புரியவில்லை.

      படத்துக்கு தேவையானதை மட்டும் அழகாக தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத். அதுவும் அந்த காட்டுப்பகுதி காட்சிகளும், இடைவேளை பிளாக் சண்டைக்காட்சியும் செம சினிமாட்டோகிராபி. எடிட்டர் கோபிகிருஷ்ணா படத்தை இன்னும் கிரஸ்பாக கத்தரித்திருக்கலாம்.

      நீ செய்வது நல்ல காரியமாக இருந்தால் அதை துணிந்து செய்து முடி என்கிறது இந்த 'செய்'. இதை விறுவிறுப்பு குறையாத திரைக்கதையில் சொல்லியிருந்தால், இந்த 'செய்' நன்றாக வசூல் செய்திருக்கும்.