twitter
    Tamil»Movies»Thanga Magan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நடுத்தரக் குடும்பம், பாசம் மிக்க பெற்றோர், ஜாலியான நட்பு என்று சுற்றிவரும் தனுஷுக்கு எமி ஜாக்சனைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. எமியுடன் வரும் தோழியை தனுஷின் நண்பன் சதீஷ் காதலிக்க, இது தெரியாத இன்னொரு நண்பன் கோபித்துக் கொள்கிறான். நட்பில் விரிசல்.

      திருவிளையாடல் ஆரம்பம், படிக்காதவன், பொல்லாதவன், விஐபி, இப்போது தங்கமகன்... எல்லா படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்புதான். அதனால்தானோ என்னமோ நிறைய காட்சிகளை ஏற்கெனவே பார்த்த உணர்வு.

      சமந்தா, எமி ஜாக்ஸன் இருவரும் நாயகிகள். சமந்தா முகத்தை க்ளோஸப்பில் பார்க்க மெய்யாலுமே கஷ்டமாகத்தான் உள்ளது. ஒரு காட்சியில் எமியின் தோற்றம் முகம் சுளிக்க வைக்கிறது.

      ஞாபக மறதித் தந்தையாக வரும் கேஎஸ் ரவிக்குமார் புதிய இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார். ராதிகா ஓகே.

      இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்துவிட்டாலும் கூட, இரண்டாம் பாதி அநியாயத்துக்கு இழுவை.

      முதல் பாதி தங்கமாக இல்லாவிட்டாலும் வெள்ளியளவுக்காவது மின்னுகிறது... பின்பாதி தகரம்!