twitter
    Tamil»Movies»Tharai Thappattai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மீண்டும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை தன் பாணியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா.

      இந்த முறை, கிராம மக்களின் முக்கிய பொழுதுபோக்கான கரகாட்டம், தப்படித்தலையும் அந்த கலைஞர்களின் வாழ்க்கையையும் படமாக்கியிருக்கிறார்.

      கரகாட்டக் கலைஞர்களின் இரட்டை அர்த்தப் பேச்சு, பாட்டு போன்றவற்றைச் சொன்னதில் முடிந்த வரை கண்ணியம் காத்திருக்கிறார் பாலா.

      சசிகுமார் மிகச் சரியாகவே செய்திருக்கிறார் என்றாலும், கடைசி வரை உம்மென்று, எப்போதும் வலியோடே திரிவது போன்ற பாவனையில் வருகிறார். அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை.

      இந்தக் கதைக்கு கரகாட்டமே தேவையில்லை. கரகாட்டம்தான் பின்னணி என்றால் இன்னும் சுவாரஸ்யமாகத் தந்திருக்கலாமே பாலா... எதற்காக இத்தனை வன்முறை, அகோர காட்சிகள்? பார்ப்பவர்களுக்கு மனச்சோர்வைத் தரும் இந்த பாணியிலிருந்து பாலா எப்போது வெளியே வரப் போகிறார்?