twitter
    Tamil»Movies»Tik Tik Tik»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இந்தியாவின் முதல் விண்வெளி படம் என அறிவித்தது தவறில்லை என்றளவுக்கு, முழுநீள விண்வெளி படத்தை தந்திருக்கும் இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜனுக்கு பாராட்டுக்கள். காதல், டூயட் என சிதறாமல் நேர்கோட்டிலேயே பயணிக்கிறது கதை. பாசக்கார தந்தை, திருடன், மேஜிக் மேன், விண்வெளி வீரன் என அனைத்தையும் அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி. அதுவும் குறும்பா பாடலில், மகனுடனான அந்த அன்பு ரசிக்க வைக்கிறது.

      ரமேஷ் திலக்கும், அர்ஜூனும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஜெயபிரகாஷூக்கு வழக்கமான வேடம் தான். தன் பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார். விண்சென்ட் அசோகன், பாலாஜி வேணுகோபால், கே.பாலாஜி, ரித்திகா ஸ்ரீனிவாஸ் என அனைவருமே தங்கள் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.

      ஜெயம் ரவியின் மகன் ஆரவுக்கு இது அறிமுகப்படம். பெரிய வேலை இல்லை என்றாலும் நன்றாகவே இருக்கிறது ஒரிஜினல் அப்பா மகன் கெமிஸ்ட்ரி.


      பெரிய, பெரிய படிப்பெல்லாம் படித்த விஞ்ஞானிகள் இருக்கும் போது, ஒரு தந்திரக்கார திருடனையா ஏவுகனையை திருட அனுப்புவார்கள். அதுவும் விண்வெளிக்கு... விண்வெளி வீரர்களுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் மேஜிக் மேன் ஜெயம் ரவிக்கு தெரிந்திருக்கிறது. அதுவும் ஐந்து நாள் வகுப்பில் கற்றுக்கொண்டது.