twitter
    Tamil»Movies»Uriyadi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • 90 களின் பின்னணியில், சாதி அரசியல் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கொஞ்சம் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

      ஒருவன் அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றால், அவன் முதலில் கையிலெடுப்பது சாதியை. அடுத்து அந்த சாதிக்கும் வேறு சாதிக்கும் மோதலை உருவாக்குவது. அதற்கு மாணவர்களை பெருமளவு பயன்படுத்துவது... மோதலில் அப்பாவிகள் செத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அயோக்கியர்கள் தலைவர்களாகிவிடுவார்கள்.

      இந்த சாதி அரசியலைச் சொல்ல வந்திருக்கும் படம் உறியடி.

      மிக வலுவான கதை. இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக கல்லூரிப் பருவத்தில் உள்ள இளைஞர்களுக்கு எப்படி சாதி நஞ்சு புகட்டப்படுகிறது என்பதை தைரியமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

      90களில் உண்மையிலேயே இப்படிச் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கிராமங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களிடம் மெல்ல மெல்ல சாதி வெறியை உசுப்பிவிட்டு மோதவிட்ட நிகழ்வுகளெல்லாம் பலருக்கும் இப்போது மறந்திருக்கும்.

      பிரதான வில்லன் மைம் கோபி பிரமாதமாக நடித்துள்ளார். லாட்ஜ் முதலாளி பையனாக வருபவர் வஞ்சத்தின் உச்சம்.

      பால் லிவிங்ஸ்டானின் ஒளிப்பதிவும் விஜயகுமாரின் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுக்கிறது. மசாலா கஃபே இசையில் பாரதியாரின் அக்கினி குஞ்சொன்று.. பாடலும் மெட்டும் சிலிர்க்க வைக்கிறது.

      வலுவாக அடிக்க முயன்றிருக்கிறார்கள். 'ஜஸ்ட் மிஸ்'தான் என்றாலும் பார்க்கலாம்!