twitter

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு டாஸ்மாக் கடை, அதில் இரண்டு நண்பர்கள், கடந்து போகும் இரு அழகான பெண்கள் இருந்தால், கொஞ்சம் லூசுத்தனமான அம்மாக்கள் அல்லது அப்பாக்கள், க்ளைமாக்ஸில் எட்டிப் பார்க்க ஒரு கெஸ்ட் ஹீரோ கிடைத்தால் போதும்... இயக்குநர் ராஜேஷ் ஒரு படத்தை சுருட்டிக் கொடுத்துவிடுவார் என்று பேசுமளவுக்கு வந்திருக்கிறது விஎஸ்ஓபி.

      படத்தில் ஹீரோ யார்? காமெடியன் யார்? என ஒரே குழப்பம். காரணம் ஆர்யாவுக்கு லூசுத்தனமான வேடம். சந்தானத்துக்கு அத்தனை சிக்கல்களையும் சமாளித்து நண்பனைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான வேடம். பல காட்சிகளில் இவரது தோற்றம், காஸ்ட்யூம், நடனம், பாத்திரம் எல்லாமே ஹீரோ மாதிரியே முன் நிறுத்துகின்றன.

      இலைமறை காயாக உள்ள கெட்ட விஷயத்தை பொதுவெளியில் இழுத்து வைத்து சீவி சிங்காரித்துக் காட்டி, புதுப்புது இளம் குடிகாரர்கள் உருவாக துணை போவது எத்தனை பெரிய தவறு ராஜேஷ்!