twitter
    Tamil»Movies»Vedalam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • அஜீத்தை, அவரது ரசிகர் பலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படைப்பு வேதாளம்.

      அஜீத் யார், அவர் ஏன் கொலை செய்கிறார்? லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன? என்பதை மசாலா மணத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா.

      பரம சாது.. பயங்கர சண்டை பார்ட்டி என இரு வேறுபட்ட சுபாவங்களைக் காட்டும் பாட்ஷா டைப் படம் இது. அஜீத் எந்தக் குறையும் வைக்கவில்லை. சொல்லப் போனால் அவ்வப்போது தேங்கி நிற்கும் திரைக்கதைக்கு தோள் கொடுத்திருக்கிறது அவரது மாஸ் இமேஜ்.

      நீ கெட்டவன்னா, நான் கேடு கெட்டவன்... போன்ற வசனங்களை அஜீத் பேசும் போதெல்லாம் காது கிழிகிறது அவரது ரசிகர்களின் கைத் தட்டல்களில்.

      பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ, சிறந்த டெக்னீஷியன்கள் என பெரும் பலம் கையிலிருந்தும் அதைச் சரியாகப் பிரயோகிக்கவில்லையோ இயக்குநர் சிவா என பல காட்சிகள் யோசிக்க வைக்கின்றன.