twitter

    விமர்சகர்கள் கருத்து

    • துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு என கொஞ்சம் சீரியஸ் காதல் கதைகளை நகைச்சுவை ஊறுகாயோடு தந்து வந்த இயக்குநர் எழில், மனம் கொத்திப் பறவையிலிருந்து 'ஊறுகாயை'யே பிரதானமாக வைத்து ஓரளவு வெற்றியும் பெற ஆரம்பித்துவிட்டார்.

      அவரது தேசிங்கு ராஜா, வெள்ளைக்கார துரை பாணியில் வந்திருக்கிற காமெடிப் படம் இந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'.

      இடையில் புஷ்பா புருஷனாக வரும் சூரியின் 'கலகல' சோகக் கதை!

      நீர்ப்பறவை, ஜீவா போன்ற வித்தியாசமான முயற்சிகளில் இறங்கிய விஷ்ணுவுக்கு இது ரொம்ப சாதாரண வேடம். லோக்கல் அல்டாப்பு & எம்எல்ஏவின் வலதுகரமாக இயல்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் சூரியை சிக்கலில் மாட்டிவிடும்போது கலகலக்க வைக்கிறார்.

      நிக்கி கல்ராணி முரட்டுத்தனமாக அறிமுகமாகிறார். கொஞ்ச நேரத்தில் சாதாரணப் பெண்ணாகிவிடுகிறார். அவருக்கும் விஷ்ணுவுக்கும் இந்த கெமிஸ்ட்ரி என்பார்களே... அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை இந்தப் படத்தில்!

      புஷ்பா புருஷனாக வரும் சூரியும், எம்எல்ஏ ரோபோ சங்கரும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். இவர்களைப் பார்த்ததுமே சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பார்வையாளர்கள். அதிலும் அந்த 500 கோடி ரூபாய் ரகசிய விசாரணையின்போது, 'காலங்காத்தால ஆறு மணிக்கு...' என ரோபோ சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் காட்சி அத்தனை நீளமாக இருந்தாலும், சிரிப்பில் குலுங்குகிறது தியேட்டர்.

      வித்தியாசமான க்ளைமாக்ஸ் வேண்டுமே என யோசித்து, கடைசியில் மொட்டை ராஜேந்திரனை ஆவிக் கூட்டத் தலைவனாக்கியிருப்பது காதில் பூ அல்ல, பூந்தோட்டம்!

      குடும்பத்துடன் விடுமுறை நாளில் சிரித்துவிட்டு வர இந்த வெள்ளைக்காரன் ஏத்தவன்தான்!