twitter
    Tamil»Movies»Vetrivel»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தனக்கு எந்தக் கதைப் பொருத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து தேர்வு செய்வதில் சசிகுமார் மற்றவர்களை விட சசிகுமார் பரவாயில்லை.

      இன்னொரு சுந்தரபாண்டியன் என்று சொல்லும்படி கதையமைப்பு இருந்தாலும், ரசிக்கும்படியா ஒரு ஸ்க்ரிப்டுடன் அவர் வந்திருக்கிறார்.

      தெளிவான திரைக்கதை, குடும்பத்தோடு பார்க்கும்படியான காட்சிகள் என கவர்ந்திருக்கிறார் புது இயக்குநர் வசந்தமணி.

      கொஞ்சம் சுந்தரபாண்டியன், கொஞ்சம் நாடோடிகள் வாசனை தெரியத்தான் செய்கிறது.
      சசிகுமார் இயல்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அந்த பழைய தயக்கம் இல்லை. நடனம், க்ளோசப் காட்சிகளைத் தவிர்த்தாலும் யாரும் இவரை குற்றம் சொல்லப் போவதில்லை. பிறகு ஏன் பிடிவாதம் சசிகுமார்?

      தம்பி ராமையா கலகலப்புக்கு ஓரளவு உத்தரவாதம் தருகிறார். விஜி சந்திரசேகருக்கு வில்லி வேடம். பரவாயில்லை.

      புதிய இயக்குநர் வசந்த மணியின் துணையுடன், தனது புலம், பலவீனங்களைப் புரிந்து, களமிறங்கியுள்ள சசிகுமார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.