twitter

    வேட்டைக்காரன் கதை

    வேட்டைக்காரன் சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் விஜய், அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 18 2009 அன்று வந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

    கதை:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் ரவி (விஜய்). ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் அங்கு நியாயம் கேட்க ரவி சென்று விடுவார். அதனால் ஊரில் ரவியின் பெயர் 'போலீஸ் ரவி' என்று ஊர் மக்கள் சூட்டினர். ரவியின் ஆசை, கணவு, லட்சியம், சென்னையில் வசிக்கும் தேவராஜ் (ஸ்ரீ ஹரி) போன்று ஒரு பெரிய போலீஸ் ஆபிசர் ஆக வேண்டும் என்பது தான். 12-ம் வகுப்பு முடித்த பின்பு 'போலீஸ் ரவி' சென்னையில் ஒரு கல்லூரியில் சேருகிறார். சென்னையில் சுசீலா (அனுஷ்கா ஷெட்டி) என்னும் பெண்ணை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். சுசீலாவின் பாட்டியின் உதவியுடன் சுசீலாவும் ரவியை காதலிக்கிறார். ரவி படிக்கும் கல்லூரியில் உமாவும் படிக்கிறார். ரவியும் உமவும் நன்பர்களாக பழகுகின்றனர்.

    சென்னையில் செல்லா எனும் ஒரு ரவுடி, தான் ஆசை கொள்ளும் அனைத்து பெண்களையும் அடைய வேண்டும் எனும் என்னம் கொண்டவர். செல்லா உமாவை ஒரு நாள் பார்த்துவிட்டு, உமாவை அனுப்புமாறு உமாவின் தந்தையை மிரட்டுவார். இதை அறிந்த ரவி செல்லாவையும் அவர் ஆட்களையும் அடித்து துவம்சம் செய்து விடுவார். செல்லாவின் தந்தை வேதனாயகம் (சலிம் கோஸ்) தன் கையில் உள்ள ஒரு காவல் அதிகாரி 'கட்டபொம்மன்' (ஷியாஜி ஷிண்டே) மூலம் ரவியை போலி என்கௌன்டெர் மூலம் 'பாம் செல்வம்' என்பவருக்கு பதிலாக கொள்வதற்க்கு ஏற்பாடுகள் செய்வார். அதில் இருந்து ரவி தப்பித்து விடுவார். ரவி, தேவராஜ் வசிக்கும் வீட்டிற்க்கு சென்ற பின்பு, வேதனாயகம் தேவராஜின் குடும்பத்தை அழித்துவிட்டு அவரையும் குருடணாக்கி விட்டார் என்று அறிகிறார்.

    ரவி எங்கு செல்வது என தெரியாமல் வேதனாயகமிடம் செல்லும் பொழுது, வேதனாயகம் நீ என் அடிமையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர் வாழ்க்கை வரலாற்றை ரவியிடம் கூறுவார். பின்பு ரவியும் அவரது நன்பர்களும் சேர்ந்து வேதனாயகத்தையும் அவர் கூட்டாலிகளையும் எதிர்த்து போராடுவார்கள். இப்போராட்டத்தில் இருவர் பக்கத்திலும் உயிர் இழப்புகள் ஏற்படும். கடைசியில் யார் ஜெய்கிறார்கள், ரவி போலீஸ் ஆகிறாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie வேட்டைக்காரன் with us? Please send it to us ([email protected]).