twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேசிய தயாரிப்பாளர்களின் ‘அங்காளி பங்காளி’ இசை வெளியீட்டு விழா!

    By Shankar
    |

    மலேசிய தொழிலதிபர்கள் தயாரித்துள்ள அங்காளி பங்காளி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    விஷ்ணு பிரியன், சானியாதாரா, சூரி, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலமுருகன் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் இசை மற்றும் வெளியீட்டு விழா சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று நடந்தது.

    இவ்விழாவில் கலைப்புலி எஸ் தாணு உள்பட பலரும் பங்கேற்றனர்.

    தாணு

    தாணு

    விழாவில் தாணு பேசுகையில், "இப்படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது இதில் நடித்துள்ள நடிகர்களின் வெற்றி பெறவேண்டும் என்கிற முனைப்பு தெரிகிறது. அதுவும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் வெகு கமர்சியலாக, ரசிக்கும்படியும் இருக்கினறன," என்றார்.

    ஜிகே

    ஜிகே

    கலை இயக்குநர் ஜிகே பேசுகையில், "நான் இந்தப் படத்தின் முதல் பாடலைப் பார்க்கவில்லை. இரண்டாவது பாடலை மட்டும்தான் பார்த்தேன். அற்புதம். அதுவும் என் நண்பன் ஒளிப்பதிவாளர் யுகே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை. இந்தப் படம் நிச்சய வெற்றி பெறும்," என்றார்.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    பாடலாசிரியர் அண்ணாமலை பேசும்போது, "என் நண்பன் கபிலனைப் போல எனக்கும் பாடல் எழுத வேண்டும் என்று ஆசை. அதாவது ‘உன் சமையலறையில்' என்ற பாடலைப் போன்று. காரணம் பாடலுக்கு இசை என்றிருந்தால்தான் ஒரு பாடலாசிரியரின் முழுமையான கவிதை வரிகள் ரசிகர்களிடம் சேரும்.

    ஆனால் நான் இதுவரை வேலை செய்த எல்லா இசையமைப்பாளர்களை விட ஸ்ரீகாந்த் தேவாவிடம் வேலை செய்தது சந்தோஷம். அதற்கு காரணம் 250 பாடல்களுக்கு மேல் எழுதியிருந்தாலும் முதல் முதலாக என் பாடல்வரிகளுக்கேற்ப ட்யூன் போட்ட முதல் இசையமைப்பாளர் அவர்தான். அதேபோல் நான் விஜய் ஆண்டனியிடம் வேலை செய்யும்பொது மிகவும் சீரியசாக இருப்பார். ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவோ மிகவும் ஜாலியாக வேலை செய்வது எங்களுக்கெல்லாம் உற்சாகமாக இருக்கும்.

    ஹன்சிகா

    ஹன்சிகா

    அதேபோல் நான் அனுஷ்கா. ஹன்சிகா மோத்வானி போன்ற ஹீரோயின்களுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். ஆனால் அவர்களெல்லாம் என் பாடலைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. ஆனால் இப்படத்தின் ஹீரோயின் என் பாடல்களின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார்," என்றார்.

    விஷ்ணுப் பிரியன்

    விஷ்ணுப் பிரியன்

    ஹீரோ விஷ்ணு பிரியன் பேசும்போது, "முதலில் இந்தப் படத்தின் ஹீரோ நான் கிடையாது. ராமகிருஷ்ணன்தான். இடையில் அவர் அவரே இயக்கும் படத்திற்கு சென்றுவிட்டதால் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. நான் ஏழு வயதில் அம்மாவை இழந்தவன். அப்பாவின் ஆதரவும் கிடையாது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எனக்கு அம்மா போல. அதற்காகவே இந்தப் படத்தில் நான் இடம் பெற்றுள்ளேன்.

    இப்போது வரும் படங்களிலெல்லாம் ஹீரோ நல்லவனாக இருப்பதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நான் மிக நல்லவனாகவே வருகிறேன். இந்தக் கேரக்டரைக் கொடுத்த இயக்குனர் பாலமுருகனுக்கு என் நன்றிகள்," என்றார்.

    சானியாதாரா

    சானியாதாரா

    ஹீரோயின் சானியாதாரா பேசும்போது, "இந்தப் படத்தில் உள்ள அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெற நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

    English summary
    The audio release of Angali Pangali was happened in Chennai on Wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X